search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தகம்"

    • அரியலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஏலம் நடைபெற்றது
    • ரூ.1.42 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒழங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஆகிய பொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திங்கள்கிழமை மறைமுக ஏலத்துக்கு வந்த 5 விவசாயிகளுடைய 3,102 கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.22.91}க்கும் குறைந்த பட்சமாக ரூ.22.81க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ ரூ.70,907 விலைபோனது.அதனை தொடர்ந்து 2 விவசாயிகளுடைய 1,155 கிலோ சூரியகாந்தி அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40.21}க்கும், குறைந்தபட்சமாக ரூ.32.09}க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ.41,782}க்கு விலைபோனது .இதே போல் விவசாயி ஒருவருடைய 439 கிலோ வேப்ப வத்தல் கிலோ ஒன்றுக்கு ரூ.48.42 கேட்கப்பட்டு ரூ.21,256 விலைபோனது. மேலும் ஒரு விவசாயினுடைய 72 கிலோ வேப்பங்கொட்டை கிலோ ஒன்றுக்கு 120.2 விலை கேட்கப்பட்டு 8,654}க்கு விலைக்கு போனது. ஆக மொத்தம் ரூ.1,42,599க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
    • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது.
    • கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.

    இந்த சந்தை தமிழகத்தில் மிகப்பெரிய சந்தை ஆகும். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகாலை முதலே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

    இதை சேலம், ஈரோடு, திருபத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    இதனிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) யுகாதி பண்டிகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் யுகாதி பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். யுகாதி பண்டிகை முன்னிட்டு கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறி விருந்துக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கறி விருந்து வைப்பது வழக்கம்.

    இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஒரு ஆட்டின் மீது ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்தது. இதனால் நேற்று மட்டும் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

    திருப்பூர் 

    இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை 29ல் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்று, முக்கிய அம்சங்கள் குறித்து பேசினர்.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:- இந்திய ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வேகமெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முக்கியமான, 15 அம்சம் குறித்து இரு நாட்டு தொழில் நுட்பக்குழுவினர் 85 அமர்வுகளில் பேசிஉள்ளனர்.வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய ஆயத்த ஆடைகள், பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும்.இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள், போட்டி நாடுகளை எளிதாக எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க செய்ய முடியும். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை கண்டிப்பாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

    அவிநாசி,

    திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு உட்பட்டு அவிநாசி, சேவூர், அன்னூர், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மும்பை உள்ளிட்ட இடங்களுக்கும் நேந்திரன் வாழை அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த3 ஆண்டாக கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை வர்த்தகம் பாதித்தது. ஆனால் இந்தாண்டு, கிராக்கி அதிகரித்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ 60 ரூபாய்க்கு நேந்திரன் வாழை கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர்.

    ×