search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற் குட்பட்ட வடக்கு வீதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திருவாரூர், கேக்கரை, சேர்ந்தமங்கலம், கொடிக்கால் பாளையம், விளமல், வாள வாய்க்கால், புலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    மேலும் இந்தப் பள்ளியில் பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற மாணவிகள் தங்கி படிக்க கூடிய விடுதியும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் இந்த விடுதியில் தங்கி படிக்கும் வேலங்குடி மற்றும் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் இருவர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றில் மாணவிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும்அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 73).

    இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதேப்போல் கும்பகோணம் அருகே உள்ள அன்னூர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (29) என்பவர் தஞ்சை மருத்துவ கல்லூரி அவசர வார்டு வளாகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தழகன், சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கம்பர் நத்தம் அக்கரை நெடுந்தரை அருகே நெய்வாசல் வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணத்தை விட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதையடுத்து அந்த வாலிபர் உடலை அம்மாபேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்து கிடந்தவர் யார் ? அவரை கொலை செய்து ஆற்றில் வீசியது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23 ) என்பதும், அவரை திருமலைசமுத்திரம் அருகே 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசியதும், உடல் அம்மாபேட்டை அருகே கரை ஒதுங்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு வல்லம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து வல்லம் போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் அய்யாசாமி பட்டி பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரது மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் வீட்டிற்கு சென்று பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

    அப்போது பாலகுருவுக்கும் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் சக்திவேலை தீர்த்து கட்ட பாலகுரு முடிவு செய்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (45), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்த்திகேயன் ( 35), சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் ராஜா (39) உள்பட ஆறு பேருடன் சேர்ந்து திருமலை சமுத்திரம் அருகே உள்ள ஒரு இடத்தில் சக்திவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
    • இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ. கார்த்தி, மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் மற்றும் சத்திரிய சேகர், கவிதா தலைமையில் 118 பேர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சேலம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல் சேலம் இரும்பாலை மாரமங்கலத்துபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இன்ஸ்பெக்டர் சாரதா கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் லட்சுமணனம் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கரும்பாலை பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்ததாக கோட்டகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட 10 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.
    • மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    புதுக்கோட்டை தெற்கு சந்தைபேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மை பணியாளரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். இதை தொடர்ந்து அவரது இளைய மகள் உமா மகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

    இதையடுத்து உமா மகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியுடன் மயிலாடுதுறை பண்டார தெருவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை கறம்பக்குடி பல்லவராயன்புரத்தை சேர்ந்த மாரி முத்துவுடன் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. முதலில் உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

    திருமணத்துக்கு பிறகு மாரிமுத்து உமா மகேஸ்வரியை துன்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரி வேலை செய்யும் இடத்துக்கே நேரில் சென்று அவரை பற்றி தவறாக பேசுவதையும் மாரிமுத்து வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் மனம் வேதனையடைந்த உமாமகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கணவர் மாரிமுத்துவின் தொல்லைகள் குறித்து கூறி கதறி அழுதார்.

    இதன் காரணமாக உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்று உமா மகேஸ்வரியை பிரித்து அழைத்து வந்துவிட்டனர். இதன்பின்னர் உமா மகேஸ்வரி தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறையில் தனது தாயுடன் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலருடன் காரில் வந்த கணவர் மாரிமுத்து, மனைவி உமாமகேஸ்வரியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு க்கொண்டு கடத்தி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தனலட்சுமி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனே கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் உமா மகேஸ்வரியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. எனவே இது பற்றி தீவிர விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் கணவர் மாரிமுத்து மகளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரிமுத்து செல்போனில் பேசி அனுப்பிய மிரட்டல் ஆடியோவையும் தனலட்சுமி போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ளார். அதில் 'உன்னை உயிரோடு விடமாட்டேன். எனக்கு துரோகம் செய்த உன் உயிர் ஊஞ்சலாடி க்கொண்டிருக்கிறது' என்று மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவரது நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அவரை கணவர் மாரிமுத்து கொலை செய்ருதிக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாரிமுத்து இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கணவர் மாரிமுத்து சிக்கினால் மட்டுமே உமா மகேஸ்வரியின் நிலை என்ன என்பது தெரிய வரும் என்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மாரிமுத்துவின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் பணியில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

    • வீட்டின் வாசல்படியில் நின்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார்.
    • பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் தோப்புத் தெருவில் வசித்து வந்தவர் சாரதா என்கிற சாரதாம்பாள் (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் வாசல் படியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் பலத்த படுகாயம் அடைந்த சாரதாம்பாள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்து வமனையில் இறந்து விட்டார்.

    இது குறித்து அவருடைய மகள் செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனந்தசபேசன் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார்.
    • டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் ஆனந்தசபேசன் (வயது 36) இவர் அதே பகுதியில் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார். இவர் சிதம்பரம், சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளான புவனகிரி, வீரப்பாளையம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடை மற்றும் பெரிய அளவிளான கடைகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதிகளில் விற்பனை செய்யும் டீத்தூள் மாத விற்பனை குறைந்து வருகிறது.  

    இதனால் இந்த பகுதியில் விற்கும் டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர். இந்த ஆய்வில் போலியான டீத்தூள் என்பது உறுதியானது. இதனையடுத்து புவனகிரி ேபாலீசார் புவனகிரியில் டீத்தூள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களான கோவிந்தராஜன் (58), ராஜா (32), இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் எங்களுக்கு மொத்த விலைக்கு டீத்தூள் இங்கு கிடைக்கவில்லை அதனால் சிதம்பரத்திலுள்ள டீத்தூள் விற்பனை செய்யும் டீலர் ஆனந்தசபேசன் என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம் என்று கூறினர். 

    இதனால் போலீசார் சிதம்பர த்திற்கு விரைந்தனர். அங்கு போலீசார் டீலர் ஆனந்தசபேசனை பிடித்து விசாரணை செய்ததில் இந்த டீத்தூளை கரூரில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறேன் என்று கூறி யதி ன்பேரில் 3 பேரையும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகு பதி, சேத்தி யா தோப்பு டி.எஸ்.பி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகி ன்றனர்.

    • கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்ட அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது.
    • அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது. இத்தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என்றும், அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அனுநிரோஷா தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டைகூட்டுரோட்டை சேர்ந்தவர் தோமாஸ் மகள் அனுநிரோஷா (வயது17). இவர் தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அரசு பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அனுநிரோஷா தனது பெரியப்பா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின் இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • காவியா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • புகாரில் சூர்யா என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறிய தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகள் காவியா (20).இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிந்து விடு முறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். நேற்று இவரது தந்தையும், தாயும் துக்க நிகழ்ச்சிக்கு சென் று விட்டு தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது மகள் காவியா காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கா ததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரில் சூர்யா என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறிய தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    • காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
    • வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டு ச்சேரியை அடுத்த வரி ச்சி க்குடி பகுதியை ச்சே ர்ந்த வர் காத்தமுத்து(வயது60). இவர் கடந்த ஏப்ரல் 13-ந் தேதிவரிச்சிச்குடி பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மெயின் சாலையையை ஒட்டி உள்ள ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது. இதில், காத்தமுத்து தலையில் பலத்த காயமடைந்தார்.உடனே அங்கிருந்தவர்கள், காத்தமுத்துவை, வரிச்சிச்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார்.

    அங்குள்ள டாக்டர்கள், புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சிகிச்சையில் இருந்த காத்தமுத்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது உறவினர் கோவி ந்தசாமி, காரைக்கால் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

    ×