என் மலர்

  நீங்கள் தேடியது "Adolescent"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 34 வயது பெண்ணை பார்க்க மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.

  இதனை அடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த அந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.இதையடுத்து பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

  அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி மோட்டார் சைக்கிளில் இருந்தது தங்க நகைகளா அல்லது கவரிங் நகையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற வாலிபர் யார்? எதற்காக மோட்டார் சைக்கிளில் விட்டுவிட்டு அவர் தப்பி சென்றார்? அந்த வாலிபர் பார்க்க வந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவ்யா தனது தாய் கண்டித்ததால் மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
  • மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  கள்ளக்குறிச்சி:

  சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா (20). இவர் வீட்டில் வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
  • மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது39). சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

  மணிகண்டன் நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்றார். இந்த நிலையில் ஓடை தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார்.
  • பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார்.

  சேலம்:

  சேலம் மல்லூர் பாரப்பட்டி மேச்சேரியாம்பா ளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவர், இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அந்த படத்தை வாட்ஸ் அப்பிலும் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

  இதையடுத்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் செல்வகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி, ஆபாசமாக படம் எடுத்து கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மஞ்சுளாவிடம் இருந்த நகையைப் பறித்துச் சென்றுள்ளனா்.
  • 2 நகைப் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

  திருப்பூர்:

  திருப்பூா்- காங்கயம் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே வசித்து வருபவா் கே.மஞ்சுளா தேவி. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதே பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மஞ்சுளாவிடம் இருந்த நகையைப் பறித்துச் சென்றுள்ளனா்.

  இது குறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து மதுரை கொடிகுளத்தைச் சோ்ந்த பி.ஸ்ரீராம் (24), விக்னேஷ், கௌதம் ஆகிய 3 பேரையும் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

  இந்நிலையில் ஸ்ரீராம் மீது மதுரை கே.புதூா் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கும், மதுரை தல்லாகுளம், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் ஆகியவற்றில் 2 நகைப் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

  இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ஸ்ரீராமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் உத்தரவிட்டாா்.இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமிடம் நல்லூா் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருேக உள்ள ெவப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியில் கொ.ம.தே.க. இளைஞனரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.
  • 3-வது நாளாக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

  பள்ளிப்பாளையம்:

  நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருேக உள்ள ெவப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29).

  கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார்.

  கடத்தல்

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கவுதம் நிதி நிறுவனத்தை பூட்டு விட்டு பாதரையில் உள்ள வீடுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்மநபர்கள், கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் அவர் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதையடுத்து அந்த மர்மகும்பல், தாங்கள் வந்த காரில் கவுதமை ஏற்றி கடத்தி சென்றது.

  இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுதம் நிதி நிறுவனத்தில் வசூலாகும் பணத்ைத எப்போதும் கையில் வைத்திருப்பார். அவர் தினமும் வீட்டுக்கு வரும்போது பணத்தை எடுத்துக்கொண்டு வருவார். இதை பார்த்து நன்கு திட்டமிட்டு, அவரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.

  எனவே அவரிடம் பணம் வாங்கியவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாராவது ஆள்வைத்து கூலிபடையினர் மூலம் அவரை கடத்தினார்களா? என போலீசார் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  சி.சி.டிவி. காட்சிகள் ஆய்வு

  மேலும் 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ நடந்த இடத்தில் கிடந்த செருப்புகள், கடத்தப்பட்ட வாகனத்தின் டயர் அடையாளம், கால் தடம் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் பாதரை, பச்சாம்பாளையம் மற்றும் அந்த பகுதிகளில் சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிரக்களில் மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கடத்தல் கார் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  இதைத்தவிர வெப்படையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை வரையிலான சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகள், காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  செல்போனில் மிரட்டல்

  இதனிடையே சேலம், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், கவுதம் பயன்படுத்தி வந்த செல்போனுக்கு வந்த அைழப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர், அவரை மிரட்டி பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  கடத்தல் நடந்த நேரத்தில் செல்போன் ேகாபுரத்தில் இருந்து வெளியான செல்ேபான் அைழப்பு விபரங்கள் குறித்து செல்போன் நிறுவனங்களிடம் கேட்டுள்ளனர்.

  நிதி நிறுவனர் கதி என்ன?

  கவுதம் கடத்தப்பட்டு 3 நாட்கள் ஆகிறது. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என எதுவும் தெரியவில்லை. அவரது கதி என்ன? என தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

   பல்லடம், ஜூலை.22-

  பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டரில் மூட்டையுடன் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் நல்லான்(வயது 26) என்பது தெரியவந்தது அவரிடமிருந்து 51கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.
  • அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் ஈசா பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் ஜமீல் கான். இவரது மகள் ஜாரியத்துல் சபரியா (வயது25). இவருக்கும் அமீன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

  அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

  கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் அருகே வசிக்கும் நெப்போலியனுக்கும், ஜாரியத்துல் சபரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2பேரும் வீட்டை விட்டு வெளி யேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்த னர். போலீசார் ஜாரியத்துல் சபரியாவை மீட்டு ஒப்படைத்தனர்.

  இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ஜாரியத்துல் சபரியா மீண்டும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும்அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் பெண் னின் தாயார் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாரியத்துல் சபரியா ஏற்கனவே மாயமான நெப்போலியனுடம் சென்றி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. எனவே நெப்போ லியனை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 செல்போன்களை அபேஸ் செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
  • சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார்.

  மதுரை

  திருமங்கலத்தை அடுத்த புலியூர், கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் ராகேஷ் (வயது 19). இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தார்.

  சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார். அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம், ரெயில்வே ஆபீஸில் வேலை கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் அங்கு தான் வேலை பார்க்கிறேன். ரெயில்வே அலுவலகத்தில் வேலை வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். உன்னிடம் பணம் உள்ளதா?' என்று கேட்டுள்ளார். அதற்கு ராகேஷ் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  அந்த நபர் 'நீ வைத்திருக்கும் 2 செல்போன்களை கொடு. இதனை அதிகாரி பெற்றுக்கொண்டு உனக்கு வேலை கொடுப்பார். அதன்பிறகு பணத்தை கட்டிவிட்டு செல்போனை திருப்பிக் கொள்" என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராகேஷ் தன்னிடம் இருந்த 2 செல்போன்களை கொடுத்துள்ளார்.

  இதனை பெற்று க்கொண்டு அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். செல்போனை வாங்கி சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களுடன் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சொக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார். நடந்த சம்பவம் குறித்து தனது சகோரரிடம் தெரிவித்தார். உடனே அவர் அருண்பாண்டி வீட்டுக்கு சென்று கண்டித்தார். அப்போது அருண்பாண்டி, அவரது தந்தை ராஜாங்கம், சகோதரி பஞ்சு ஆகியோர் அவதூறாக பேசி மாணவியின் சகோதரரை சரமாரியாக தாக்கினர்.

  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஏ.முக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டி உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது புகார் வந்துள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

   விருதுநகர்

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பகுதியை சேர்ந்த இளம்பெண் பிளஸ்-1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரும், முத்து லட்சுமி என்ற பெண்ணும் தோழிகளாக பழகி வந்தனர்.

  இதனால் இளம்பெண் அடிக்கடி தோழி முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று வருவார். அப்போது முத்துலட்சுமியின் அண்ணன் தலைமலை என்பவரும், இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு காதலாக மாறியது.

  கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இளம் பெண் வீட்டுக்குச் சென்றபோது தலைமலை அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் இளம் பெண் கர்ப்பமானார்.

  இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடந்த 16-ந் தேதி குருணை மருந்தை(விஷம்) குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமலை மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமலையை தேடி வருகின்றனர்.

  ×