என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளிப்பாளையத்தில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர் கதி என்ன?
  X

  பள்ளிப்பாளையத்தில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. இளைஞரணி தலைவர் கதி என்ன?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருேக உள்ள ெவப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியில் கொ.ம.தே.க. இளைஞனரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.
  • 3-வது நாளாக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

  பள்ளிப்பாளையம்:

  நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருேக உள்ள ெவப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29).

  கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார்.

  கடத்தல்

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கவுதம் நிதி நிறுவனத்தை பூட்டு விட்டு பாதரையில் உள்ள வீடுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்மநபர்கள், கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் அவர் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதையடுத்து அந்த மர்மகும்பல், தாங்கள் வந்த காரில் கவுதமை ஏற்றி கடத்தி சென்றது.

  இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுதம் நிதி நிறுவனத்தில் வசூலாகும் பணத்ைத எப்போதும் கையில் வைத்திருப்பார். அவர் தினமும் வீட்டுக்கு வரும்போது பணத்தை எடுத்துக்கொண்டு வருவார். இதை பார்த்து நன்கு திட்டமிட்டு, அவரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.

  எனவே அவரிடம் பணம் வாங்கியவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாராவது ஆள்வைத்து கூலிபடையினர் மூலம் அவரை கடத்தினார்களா? என போலீசார் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  சி.சி.டிவி. காட்சிகள் ஆய்வு

  மேலும் 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ நடந்த இடத்தில் கிடந்த செருப்புகள், கடத்தப்பட்ட வாகனத்தின் டயர் அடையாளம், கால் தடம் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் பாதரை, பச்சாம்பாளையம் மற்றும் அந்த பகுதிகளில் சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிரக்களில் மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கடத்தல் கார் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  இதைத்தவிர வெப்படையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை வரையிலான சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகள், காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  செல்போனில் மிரட்டல்

  இதனிடையே சேலம், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், கவுதம் பயன்படுத்தி வந்த செல்போனுக்கு வந்த அைழப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர், அவரை மிரட்டி பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  கடத்தல் நடந்த நேரத்தில் செல்போன் ேகாபுரத்தில் இருந்து வெளியான செல்ேபான் அைழப்பு விபரங்கள் குறித்து செல்போன் நிறுவனங்களிடம் கேட்டுள்ளனர்.

  நிதி நிறுவனர் கதி என்ன?

  கவுதம் கடத்தப்பட்டு 3 நாட்கள் ஆகிறது. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என எதுவும் தெரியவில்லை. அவரது கதி என்ன? என தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

  Next Story
  ×