என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thug act"

    • தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் கடந்த 17-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ராஜசேகர் தொடர்ந்து அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

    • சிறையில் அடைப்பு
    • குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (31).

    ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் பத்மநாபன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற ரஜினிமுருகன் (27).

    இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • கள்ள சாராயம் விற்பனை செய்ததால் நடவடிக்கை
    • கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி அம்சா (52) ஆகிய இருவரும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயலட்சுமி உட்பட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த பல்வேறு வழக்குகள் நிலுவை உள்ள ஜெயலட்சுமி மற்றும் அம்சா ஆகிய இருவரும் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • போலீசார் சிறையில் அடைத்தனர்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகு திகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் பகுதிகளை சேர்ந்த அம்மனூர் சிவக்குமார் மகன் பன்னீர் செல்வம் (வயது 22), கிரிபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் திலிப் என்கிற டி.எம்.ஆர்.திலிப் (26), பிரபாக ரன் மகன் கவுதம் (21), ஏழுமலை மகன் அஜித் என்கிற போர் போஜி (25), அரக்கோணம் சோளிங்கர் ரோடு புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பாலாஜி மகன் சசிக்குமார் என்கிற கவுதம் (26) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

    மேலும் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய் தார்.

    அதன்பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டம் சிப்காட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் வாலாஜா தாலுகாவானா பாடிகிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் (வயது 44) என்பவரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அதே போல், வாலாஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலையில் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் ராசாத்துபுரம் பகுதியைச் சேர்ந்த குமரன்(29) என்பவரை ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல், சோளிங் கர் அருகே கொலை வழக் கில் சோளிங்கர் தாலுகா ஐப்பேடு கிராமத்தைச்

    சேர்ந்த அசோக்பாண் டியன்(24), கோபி(24), தாமோதரன்(24) ஆகி யோரை சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடு பட்டு வரும் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்ய எஸ்பி தீபா சத்யன். கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரைத்தார் .

    அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணத்தை போலீசார் வழங்கினர்.

    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் பேட்டை அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 23).

    இவர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக, அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் விக்கி என்கிற விக்னேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

    • 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பஷீரின் மகன் பக்ருதீன் (வயது22). பிரபல ரவுடியான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்ருதீன் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 2-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று 2 இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு மட்டுமின்றி, அந்த குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யவும் முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்ருதீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பக்ருதீன் மீது போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பக்ருதீன் சிறையில் இருந்து வெளியே வந்தால் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவின் நகலை ஜெயங்கொண்டம் போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.


    • கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவைச் சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன்(வயது22). தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த பக்ருதீனை ஜெயங்கொண்டம் காவல் துறையினர் கடந்த 2ந் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.




    • நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார்
    • சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறுமி காணாமல் போனதாக அவளது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்த நந்தகுமார்(வயது 45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அழகம்மாள், போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோர், நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தவழக்கில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.


    • கள்ள சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது
    • போலீசார் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்ற சரித்திர பதிவேடுகள் கொண்ட குற்றவாளிகளை எச்சரித்து பிரமாண பத்திரம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுக்கின்றனர். பலர் கைது செய்யப்படுகிறார்கள்.

    இருந்தபோதிலும் சில குற்றவாளிகள் மீண்டும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்தாண்டில் மட்டும் 116 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை தடுக்க சில மலைக்கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 35 பேர் குண்டர் சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்தாண்டில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் என 80 பேர் மீதும், மணல் கடத்தியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    • கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54), தையல் தொழிலாளி.

    இவர் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணா மலையில் இருந்து நல்ல வன்பாளையம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி வந்த மர்ம நபர்கள் தாமரை நகர் அருகில் ஆறுமுகத்தை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் தண்டராம்பட்டு அருகில் உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பரந்தாமன் உள்பட கூலிப்படையை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.

    ஆறுமுகம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள வரகூரை சேர்ந்த பரந்தாமன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல், மோசஸ், தமிழரசன், கலசபாக்கம் சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பரந்தாமன், இசக்கியல், மோசஸ், தமிழரசன், பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி சாந்தி (வயது 31). இவர், சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

    இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதைத் தொடர்ந்து சாந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    ×