என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண்ணிடம் நகைபறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
  X

  கோப்புபடம். 

  பெண்ணிடம் நகைபறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மஞ்சுளாவிடம் இருந்த நகையைப் பறித்துச் சென்றுள்ளனா்.
  • 2 நகைப் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

  திருப்பூர்:

  திருப்பூா்- காங்கயம் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே வசித்து வருபவா் கே.மஞ்சுளா தேவி. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதே பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மஞ்சுளாவிடம் இருந்த நகையைப் பறித்துச் சென்றுள்ளனா்.

  இது குறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து மதுரை கொடிகுளத்தைச் சோ்ந்த பி.ஸ்ரீராம் (24), விக்னேஷ், கௌதம் ஆகிய 3 பேரையும் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

  இந்நிலையில் ஸ்ரீராம் மீது மதுரை கே.புதூா் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கும், மதுரை தல்லாகுளம், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் ஆகியவற்றில் 2 நகைப் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

  இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ஸ்ரீராமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் உத்தரவிட்டாா்.இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமிடம் நல்லூா் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

  Next Story
  ×