search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரையும் அவரைப் பிடித்த தனிப்படை போலீசாரையும் படத்தில் காணலாம்.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

    • சதீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    • ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் செல்போன் திருடுவதாகவும் ரயிலில் பயணம் செய்ய உடைமை களுடன் வரும் பயணிகளிடம் கைப்பைகளை திருடுவதாகவும் திருப்பூர் ரயில்வே போலீசருக்கு புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்ப டையில் திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையி லான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலைத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பதும் இவர் தான் திருப்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலக்குமார் என்பவரிடம் செல்போனையும் திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்த இளமுருகன் என்பவரிடம் இருந்த கைப்பையை திருடி அதிலிருந்த 1 பவுன் நகை மற்றும் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவனிடம் இருந்த 2 செல்போன்கள் 1 பவுன் நகையை மீட்டனர். பின்னர் சதீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×