search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public prosecutor"

    • அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஜமீலா பானு பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 18-ந்தேதிமதியம் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர்திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த ரகுமான்கான்(வயது 26) என்பவர் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகளைகொலை செய்யும் நோக்கத்தில் வெட்டுக்கத்தியால் இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரகுமான்கான் மீது சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ்நிலையத்தில் பெண்களை துன்புறுத்துதல் பிரிவில் ஒரு வழக்குஉள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால்அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கமாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கோவை மத்தியில் சிறையில் உள்ள ரகுமான்கானிடம், ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அரசு வழக்கறிஞர் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது என, பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். #MadrasHighCourt #BalakrishnaReddy
    சென்னை:

    1998ல் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றும், 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார். தன்னை குற்றவாளி என அறிவித்ததால் தகுதியிழப்பு ஏற்பட்டிருப்பதால் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியிழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தீர்ப்புக்கு எப்படி தடை கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கூட்டமாக சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்றே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தவறு என்று கூறுவீர்களா? அரசு வழக்கறிஞர் காவல்துறை தரப்புக்காகத்தான் வாதாட வேண்டும்; வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்’ என அறிவுறுத்தினார்.

    அத்துடன் காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    தீர்ப்பு வெளியானதும் பதவி விலகிவிட்டதால் தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி கேட்டுக்கொண்டார். வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, மதியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். #MadrasHighCourt #BalakrishnaReddy

    ×