search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bailiff"

    • அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கோபு மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் கோபு (வயது 32) , இவர் மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பூர் கூட்டுரோட்டில் பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32), என்பவரும், ராமசந்திரன் (வயது 24) ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2பேரையும் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார் சேலம் விருத்தாசலம் சாலையில் வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி அருகே தே புடையூர் கைகாட்டி அருகே சென்றபோது விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய கோபுபலத்த காயமடைந்தார் அவருடன் சென்ற ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு பகுதியிலும் காயம் ஏற்பட்டது இவர்கள் 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக கோபுவை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் ராமச்சந்திரன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கபட்டுள்ளனர். 

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரும் கனியாமூர் தனியார் பள்ளி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி ஏற்கனவே கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யபட்டனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்து தற்போது விருத்தாசலம் நீதி மன்றத்தில் தினந்தோறும் கையெப்பம் போட்டு வருகின்றனர் நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட சென்ற போது தான் விபத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    • கடலூரில் பரபரப்பு - ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டாரா? ேபாலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
    • கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அண்ணா பாலம் கீழே கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.

    தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதந்திருந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 42) என தெரியவந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜா என்பவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் ராஜா உயிர் இழந்தார். இந்த வழக்கை கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி இறந்த ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ராஜேஷ் மர்மமான முறையில் கெடிலம் ஆற்றில் இறந்து கிடந்தார்.

    இந்த நிலையில் ராஜேஷ் எப்படி இறந்தார்? யாரேனும் ராஜேஷை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசினரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×