கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 3 பேர் விபத்தில் சிக்கினர்

கோபு மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 3 பேர் விபத்தில் சிக்கினர்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் கோபு (வயது 32) , இவர் மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பூர் கூட்டுரோட்டில் பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32), என்பவரும், ராமசந்திரன் (வயது 24) ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2பேரையும் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார் சேலம் விருத்தாசலம் சாலையில் வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி அருகே தே புடையூர் கைகாட்டி அருகே சென்றபோது விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய கோபுபலத்த காயமடைந்தார் அவருடன் சென்ற ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு பகுதியிலும் காயம் ஏற்பட்டது இவர்கள் 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக கோபுவை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் ராமச்சந்திரன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கபட்டுள்ளனர். 

விபத்தில் காயம் அடைந்த 3 பேரும் கனியாமூர் தனியார் பள்ளி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி ஏற்கனவே கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யபட்டனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்து தற்போது விருத்தாசலம் நீதி மன்றத்தில் தினந்தோறும் கையெப்பம் போட்டு வருகின்றனர் நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட சென்ற போது தான் விபத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com