கடலூரில் பரபரப்பு - ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

கடலூரில் பரபரப்பு - ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டாரா? ேபாலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் கிடந்த ராேஜஷின்  உடலை  தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கடலூர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் கிடந்த ராேஜஷின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
Published on

கடலூர்:

கடலூர் அண்ணா பாலம் கீழே கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.

தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதந்திருந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 42) என தெரியவந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜா என்பவரை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் ராஜா உயிர் இழந்தார். இந்த வழக்கை கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி இறந்த ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ராஜேஷ் மர்மமான முறையில் கெடிலம் ஆற்றில் இறந்து கிடந்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் எப்படி இறந்தார்? யாரேனும் ராஜேஷை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசினரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கெடிலம் ஆற்றில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com