search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.
    • இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது. இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (1-ந் தேதி) கூட உள்ளது. இது 28-வது கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
    • எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவா திக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

    அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

    மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

    இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
    • மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம்

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

    மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்குத் தேவையான எல்லா வகையான சட்ட நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளோம்.

    கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை புதிதாக எந்த பயிரையும் விளைவிக்க வேண்டாம் என்று வேளாண்மை துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.

    அடுத்த மாதத்தில் சிறிது மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.
    • மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.

    சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும்.

    தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆர்ப்பா ட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கர், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது.
    • மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றமாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது. இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், சண்டிகர், டெல்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது.

    55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும், 2005-ம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால் ஓர் ஆண்டு கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

    பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, அதன்பின்னர் மீத்தேன் மற்றும் எரிவாயு எடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    திருச்சி:

    தமிழக அரசு உடனடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்தும் இதற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக அரசை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாநில துணைத்தலைவர் மேக ராஜன் முன்னிலையில் விவசாயிகள் 11-வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கர்நாடகாவிடம் மற்றும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தர வேண்டும்.

    விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஆற்று நீரில் கயிறு கட்டி இறங்கி, போராட்டம் நடந்த மணல் திட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    இதுகுறித்து அய்யாகண்ணு கூறும்போது, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, அதன்பின்னர் மீத்தேன் மற்றும் எரிவாயு எடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். உதவி ஆணையர்கள் அன்பு, நிவேதா லட்சுமி ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.

    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது.
    • தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து மேகதாதுவில் அணைக்கட்டும் பணியில் ஈடுபடுகிறது.

    தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது. காவிரி நீர் என்பது தமிழக விவசாயிகளின் உயிர்நீர். இவற்றில் அரசியலை புகுத்தக்கூடாது. தமிழக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்சினையில் உரிய ஆலோசனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • வானிலை அனுமதித்தால் 60 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும்.

    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் தற்போது மாற்று வழியை கண்டறிய கர்நாடக அரசு தயாராகி வருகிறது. அணை தொடர்பான திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதை சரி செய்ய ஏதுவாக மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இவர்கள் நில அளவீடு பணிகளை தொடங்கி உள்ளனர். கர்நாடகா-தமிழ்நாடு காடுகளுக்கு இடையேயான எல்லையை குறிக்க ஒவ்வொரு 20 மீட்டருக்கும் மர கட்டைகளை வைத்துள்ளனர்.

    மழை, காற்று, வெள்ளம் போன்றவற்றால் மரக்கட்டைகள் பழுதடைந்து குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கான்கிரீட் தூண்கள் அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் ஒருங்கிணைந்த நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு வனத்துறை முதன்மை வன பாதுகாவலரின் ஒப்புதலை பெற வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.

    இதை தொடர்ந்து மேகதாது திட்டத்தில் நீரில் மூழ்கும் பகுதிகள் மற்றும் அழியும் மரங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு உதவும் வகையில் அளவுகள் அமைத்து வருகின்றனர்.

    இதுபற்றி கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறுகையில், நில அளவீடு பணிக்காக பந்திப்பூர் புலிகள் காப்பகம், சாம்ராஜ்நகர், பிலிகிரி ரங்கநாதசுவாமி வனவிலங்கு சரணாலயம், எம்.எம். ஹில்ஸ் சரணாலயம், காவிரி வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். வானிலை அனுமதித்தால் 60 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும் என்றார்.

    மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
    • நான்கு அணைகளின் மொத்த நீர் இருப்பு 78 டி.எம்.சியை தொட்டிருக்கிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமலேயே போய்விடுமோ? என்ற வேதனையில் உழன்று கொண்டிருந்த உழவர்களின் கண்ணீரை, பருவமழையைக் கொண்டு துடைத்திருக்கிறாள் இயற்கை அன்னை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி என்ற அளவை தாண்டி விட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இன்று புதன்கிழமை காலை வரையிலான 3 நாட்களில் மட்டும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் 22.85 டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. நான்கு அணைகளின் மொத்த நீர் இருப்பு 78 டி.எம்.சியை தொட்டிருக்கிறது. கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறந்து விடப்படுகிறது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், மொத்தக் கொள்ளளவு 181 டி.எம்.சியைக் கடந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விடுவது எல்லாம் அதிசயம் தான். அது எப்போதோ ஒரு முறை தான் நடக்கும். அதனால், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார்.
    • ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு கட்டிட அரங்கம் உள்பட பல்வேறு பணிகள் ரூ .140 கோடி மதிப்பில் கட்டி முடிவடைந்துள்ளன.

    இந்தத் திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் இன்று விழா நடைபெறும் இடத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார். அன்று நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதற்கு மறுநாள் 27ஆம் தேதி நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வற்கான விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மதியம் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகம், பல்நோக்கு மையக் கட்டிட அரங்கம், பழைய திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டுதல் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்த பல்வேறு திட்ட பணிகளை மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.140 கோடி மதிப்பில் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் அந்த அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது.
    • மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பதற்கு தடை விதித்தது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற் கொள்வதற்காக 29 வன அதிகாரிகளை கர்நாடக அரசு அமர்த்தியிருக்கிறது. மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு கூட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி மேகதாது அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் அந்த அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது.

    தமிழகத்தின் ஒப்புதல் இல்லாத நிலையில், காவிரி ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகத்தை ஆட்சி செய்த முந்தைய பா.ஜ.க. அரசு முயன்றது. அதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பதற்கு தடை விதித்தது.

    மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், அணை தொடர்பான எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது. அதையும் மீறி ஏதேனும் பணிகளை மேற்கொண்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இந்த உண்மைகளை அறிந்தும் கூட மேகதாது அணை கட்டுவதற்கான வனத்துறை நிலங்களை கணக்கெடுக்கும் பணிகளை செய்வதற்காக 29 அதிகாரிகளை அமர்த்துவது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், அண்டை மாநில உறவுகளின் மாண்புகளையும் அவமதிக்கும் செயலாகும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம் ஆகிய எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மேகதாது அணை கட்டுவது மட்டும் தான் எங்களின் ஒற்றை நோக்கம் என்பதை இதன்மூலம் கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்துக்கும் காரணம், மேகதாது விவகாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு செய்த தவறுகள் தான். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தான் முதல் தவறு ஆகும்.

    இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சட்டவிரோதமானவை.

    வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    எனவே, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதே போல், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×