என் மலர்

  நீங்கள் தேடியது "Smart city project"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  திருச்சி :

  மத்திய அரசு நகரங்களை மேம்படுத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகம் செய்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 11 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

  மத்திய, மாநில அரசுகளின் சரி பாதி பங்களிப்புடன் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தார்.

  இந்த நிலையில் விசாரணை அனைத்து முடிவடைந்து டேவிதார் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 200 பக்க விசாரணை அறிக்கையை வழங்கி உள்ளார். இதில் திருச்சி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சத்திரம் பஸ் நிலையம் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. தில்லை நகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டது. உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. மேற்கண்ட பணிகள் உட்பட ரூ.261 கோடி பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

  இதில் பல திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் இன்று தெரிவித்தார். இந்த ஒரு நபர் விசாரணை அறிக்கை முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதற்கிடையே நேற்று இரவு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

  அப்போது தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நிலையை ஆய்வு செய்தார். மேலும் முந்தைய ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாகவும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்ற நகரங்களில் விசாரணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
  • திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? என ஆய்வு

  சென்னை:

  மத்திய அரசின் உதவியுடன் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் அந்தஸ்துக்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

  இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்த திட்டத்துக்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசுகள் 50 சதவீதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

  சென்னையை பொறுத்த வரை தி.நகர் பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டது. இதற்காக பாண்டி பஜார் பகுதிகளில் நடை பாதைகள் அகலப்படுத்தப்பட்டன. வாகனம் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. போக்குவரத்தும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

  இந்த நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்ட தி.நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

  அங்கு சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

  தி.நகரில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்றார்.

  அதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு முறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கை துறை சுட்டிக் காட்டியுள்ளதா? அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஆகியவை பற்றி இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

  மேலும் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் அவர் அறிக்கை தயாரித்தார்.

  இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் தாக்கல் செய்தார். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்குகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணிகளை விரைவாக முடிக்கும் படி மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
  • கட்டிட பணிகளை மேயர் பார்வையிட்டார்.

  திருப்பூர் :

  திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான திட்டங்கள் மற்றும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பணிகளை விரைவாக முடிக்கும் படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

  இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் டவுன்ஹால், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார் ஆய்வு செய்தார். மேலும், கட்டிட பணிகளையும் பார்வையி–ட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி கழக செயலாளர் மு.கே.உசேன், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, கண்ணப்பன், திவாகரன் மற்றும் உதவி ஆணையர்கள் வாசுகுமார், கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  ×