search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்: டி.கே.சிவகுமார்
    X

    மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்: டி.கே.சிவகுமார்

    • கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
    • மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம்

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

    மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்குத் தேவையான எல்லா வகையான சட்ட நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளோம்.

    கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை புதிதாக எந்த பயிரையும் விளைவிக்க வேண்டாம் என்று வேளாண்மை துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.

    அடுத்த மாதத்தில் சிறிது மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×