search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    • கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
    • மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்

    நாகர்கோவில் : கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் வழங்கினார்  குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 28-ந்தேதி இரவு இவர்களது விசைப்படகு மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் கவிழ்ந்தது. இதில் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீனவர்கள் ஆன்றோ (47), ஆரோக்கியம் (52), கொட்டில்பாடு பயஸ் (63) ஆகியோர் மாயமாகினர்.

    இதில் பயஸ் உடல் 30-ந்தேதி மீட்கப்பட்டது. ஆன்றோ, ஆரோக்கியம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இவர்களை உறவினர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் மாயமான மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் மற்றும் பலியான பயஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    பின்னர் பயஸ், ஆரோக்கியம் ஆகியோரது குழந்தைகளின் மேற்படிப்புக்கான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இதில் தி.மு.க. மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்றனி ராஜ் (எஸ்.கே.), செயலாளர் அனனியாஸ், துணை செயலாளர் ரூபன், குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க தலைவர் வற்கீஸ், செயலாளர் பிராங்கிளின், துணை செயலாளர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர் சிபு மற்றும் விஜயன், மிரா ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது
    • ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.

    நாகர்கோவில்:  குமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதியைச்சேர்ந்தவர் டீசன் என்ற கென்சலா கிரேசி (வயது 60),மீனவர். இவரது சகோதரியின் மகன் தினேஷ் குமார். இவரது வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு டீசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் டீசன் மீது ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று டீசன், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது ராதிகாவின் கணவர் பிரபு அவரது சகோதரர் ராஜ் என்ற ஸ்டாலின்ராஜ் ஆகியோர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் டீசன் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பிரபு ராஜ் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிரபு,ராஜ் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். கைது செய்யப்பட்ட பிரபு,ராஜ் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    அரசு தரப்பில் வழக்க றிஞர் மதியழ கன் ஆஜரானார். பிரபு,ராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பெரி யார் நகரை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 62), மீனவர். இவர் அஞ்சு கூட்டுவிளையை சேர்ந்த பீட்டர் (50) என்பவருடன் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வெளியில் சென்றார்.

    கன்னியாகுமரி 4 வழிச்சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவித மாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மரியதாசன், பீட்டர் படுகாயம் அடைந்த னர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மரிய தாசன் இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து பீட்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மரியதாசனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முடிவு
    • கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தில் ஒரே ஒரு படகு மட்டுமே நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது. இதனால் படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் மற்ற படகுகள் ஏற்கனவே சென்ற படகு கரை திரும்பும் வரை கடலில் சுற்றுலா பயணிகளுடன் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்க அரசுக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதலாக படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.20 கோடி செலவில் 100 மீட்டர் நீளத்தில் புதிய படகு தளம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

    படகு தளம் கட்டுவத ற்காக மொத்தம் 1500 சிமெண்ட் பிளாக்குகள் தயார் செய்யப்பட்டன. இதில் 1200 சிமெண்ட் பிளாக்குகள் மட்டுமே சின்னமுட்டம் துறைமுக த்தில் இருந்து கடல் வழியாக மிதவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி நிரப்பும் பணி நடந்த வந்தது.

    இந்த நிலையில் படகு கட்டும் தளம் அமைக்க ப்படுவதால் வாவத்துறை பகுதி மீனவர்கள் தங்க ளுக்கு கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்ய முடியாத ஆபத்தான நிலை இருந்து வருவதாகவும் இந்தப் படகு கட்டும் தளம் அமைக்கப்படுவதன் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    இது சம்பந்தமாக வாவ த்துறை பகுதி மீனவர்கள் குமரி மாவட்ட கலெக்ட ரையும் நேரில் சந்தித்து விவேகானந்தர் மண்ட பத்தில் கூடுதல் படகுதளம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து மனு கொடுத்தனர். இதற்கிடையில் வாவத்துறை பகுதி மீனவர்கள் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர். தளவாய் சுந்தரத்தையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த னர்.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. முன்னி லையில் பொதுப் பணி த்துறை அதிகாரிகள் மற்றும் வாவத்துறை பகுதி மீன வர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நேற்று மாலை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் குமரி மாவட்ட பொதுப்ப ணித் துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர் முருகே சன், உதவி பொறியாளர் மாரித்துரை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி, தமிழ்நாடு கடல் சார் வாரிய துறைமுக பாதுகாப்பாளர் தவமணி மற்றும் வாவத்துறைபகுதி மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இது சம்பந்தமாக தமிழ்நாடு கடல்சார் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி. நிறுவன பொறியா ளர்களை வரவழைத்து விவேகானந்தர் மண்டப த்தில் மீனவர்களின் மீன்பி டித் தொழில் பாதிக்காத வண்ணம் படகு தளம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வது என்றும் அதற்காக 20 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அதிகா ரிகள் உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம்நடந்த இந்த இந்த பேச்சுவார்த்தை முடி வுக்கு வந்தது. அதன் பிறகு மீனவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து அங்குஇருந்து கலைந்து சென்றனர்.

    • வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
    • தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
    • இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.

    பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.

    அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    • கைதான சிறுவர்கள் வாக்குமூலம்
    • கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் சகாயம் (வயது 45). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும், கன்னியா குமரி சர்ச் சன்னதி தெருவை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கன்னியாகுமரி சர்ச் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவர் ஒருவரையும், 16 வயது இன்னொரு சிறுவரையும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதா வது:-

    சகாயத்துக்கும் எங்க ளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது சகாயம் பாட்டிலை உடைத்து எங்களை குத்திவிட்டார். இதில் எங்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது இருந்து வந்த முன்விரோதம் காரணமாக நாங்கள் அவரை எப்படியா வது கொலை செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டோம். இந்த நிலையில் சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு நின்று கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் கத்தியுடன் அவரை கொலை செய்வதற்காக அங்கு சென்றோம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சகாயத்தை எங்களது கையில் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த 3 சிறுவர்களையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க ளை சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அதன்படி அந்த 3 சிறுவர்களும் நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைகாற்று வீசி வருகிறது. இன்றும் கடற்பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறை முக தெருவை சேர்ந்தவர் லூகாஸ் (வயது 61), மீனவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

    லூகாஸ் குடும்ப பிரச் சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திடுக்கிட்டு அலறி னார்கள். பின்னர் தீக்காயத்தினால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் லூகாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
    • தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.

    இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    • ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
    • குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குளச்சல் சாஸ்தான்கரை யில் ஒரு அபார்ட்மெண்ட் டில் வசித்து வருபவர் விஜயன் (வயது 34). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்பவரும் வசித்து வருகிறார். குடும்ப தகராறில் விஜயன் மீது சதீசுக்கு முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சதீஸ் செல்போன் மூலம் விஜயனை வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற விஜயனை சதீஸ் அரிவாளால் வெட்டினார். இதில் விஜயனுக்கு இடது முழங்கை மற்றும் இடது கை பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாய மடைந்த விஜயன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜன்னல் கம்பி வழியாக புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
    • ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமம் நடுத்தெரு பகுதி 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 47).

    இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்ப வத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜாண்சன் கையில் கிடந்த ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    மேலும் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டி னுள் நுழைந்து திருடி யிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டுபோன பொருட்க ளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×