search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள்"

    • வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான ‘ஆடியோ கிராம்’ அமைக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஆஸ்பத்திரியில் காது கேளாதோர், வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான 'ஆடியோ கிராம்' அமைக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஷீலா, முத்துலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்மாநில தலைவர் ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், மகேஷ், பிரபுதாசன், புருஷோத்தமன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூ்டடம் நாளை நடக்கிறது.
    • இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மதுரை

    மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (13-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    மேற்படி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான பவ்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல், காதொலி கருவி போன்ற உதவி உபகர ணங்கள், பலி பாஸ், மாதாந்திர உதவித் தொவை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் அளித்திடலாம்.

    மேற்கண்டவாறு நடை பெறும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மதுரை வரு வாய் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மேற்கு வட்டம், மதுரை வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை (UD ID-Card) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய வற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடை யுமாறு தெரிவிக்கப்படு கிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழகம் அளவில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி யாத்திரை கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பங்கேற்றுள்ளனர். அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் ஆட்சிமன்ற குழு தலைவர் அஷ்ரப் ஏற்பாட்டில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆட்சிமன்ற குழு உறுப்பினர் இப்ராகிம் வரவேற்று பேசினார். யாத்திரை குழுவின் ஒருங்கிணைப்பாளர் சோபா ஸ்ரீகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

    பின்னர் அங்கிருந்து நெல்லை, தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக மீண்டும் சென்னைக்கு செல்கிறது என்று தெரிவித்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் நன்றி கூறினார். இதில் தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் சேக்பீர் முகமது காமீல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சுமதி ஆகியோர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது காதொளி கருவி இருந்தும் வட்டார அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மறுப்பதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    • அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது
    • மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளியவர்களுக்கு காலை உணவு, சில முக்கிய தினங்களில் மூன்று விலை உணவும் ஆலயம் அறக்கட்டளை நண்பர்கள் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின ஆண்டினை முன்னிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் மற்றும் உணவும் சுமார் 25 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஒவ்வொரு நாளும் 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் ஏ.கே.குமார் துணை தலைவர் ஆர் கே குமணன் எம்சி செயலாளர் செயலாளர் ஜி.மோகன்ராஜ் பொருளாளர் எஸ் கணேசன் துணைச்செயலாளர் ஜி.மனோஜ் குமார் மற்றும் அறங்காவலர்கள் ஆர்.விக்ரம் ராஜா இயேசுராஜ் சந்தோஷ் குமார் நகர்மன்ற உறுப்பினர் பி.கே.நாடிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் எஸ். சிவா நன்றி கூறினார்.

    • 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்டமாற்று த்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புறவாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனா ளிகளு க்கான சிறப்புதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இதில்தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்த குதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
    • 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.

    கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்படும்.

    வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.

    முகாமுக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இதற்கு முன் விண்ணப்பம் அளித்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    எனவே, நாகை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளைகள் இணைந்து நடத்தியது.

    மதுரை

    தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தனியார் அறக்கட்டளைகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடத்தியது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 5 பேர் தங்களின் வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்தனர்.

    நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூபதி, பொருளாளர் சிவகுமார், தயான் சந்த் விருது பெற்ற சர்வதேச தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தீபா ரோட்டரி சங்க தலைவர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறா தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறுகிறது.

    இதேபோல் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகம் பேருந்து நிலையம் அருகில் வரும் 18-ம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம சேவை கட்டிடத்தில் 22-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றி தழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திற னாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொ ழுது பெறப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி,  தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினை த்தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக் க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம் ,10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெ றவிரும்பும் மனுதாரர்கள், தங்களின்வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வி ண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும், இலவசமாக பெற்று க்கொள்ளலாம்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெ றுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடங்கு ம் காலா ண்டிற்கான உதவித்தொகை விண்ண ப்பங்களை மனுதாரர்கள் 31.8.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியம யமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இத் தகவலை கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப் பத்தை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த உதவித்தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. வேலை வாய்ப்பற் றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்திருந்தால் அலுவலகம் வர தேவையில்லை.

    இவ்வாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 வகையான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்கள் உள்ளது.
    • இ-சேவை மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள், வங்கி கடன் மானிய விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட 5 வகை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அருகே உள்ள இ-சேவை மற்றும் https://tnesevai.in.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×