search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பு
    X

    யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    காயல்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பு

    • அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழகம் அளவில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி யாத்திரை கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பங்கேற்றுள்ளனர். அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் ஆட்சிமன்ற குழு தலைவர் அஷ்ரப் ஏற்பாட்டில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆட்சிமன்ற குழு உறுப்பினர் இப்ராகிம் வரவேற்று பேசினார். யாத்திரை குழுவின் ஒருங்கிணைப்பாளர் சோபா ஸ்ரீகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

    பின்னர் அங்கிருந்து நெல்லை, தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக மீண்டும் சென்னைக்கு செல்கிறது என்று தெரிவித்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் நன்றி கூறினார். இதில் தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் சேக்பீர் முகமது காமீல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×