search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாடு"

    • எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
    • மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    ஹிந்த் மஸ்தூர் சபா (எச்எம்எஸ்) வின் 75-ம் ஆண்டு பவள விழா மாநாடு இன்று நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. எச்எம்எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் எம்.சுப்பிரமணி பிள்ளை வரவேற்றார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எச்எம்எஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹர்பஜன்சிங் சித்து கலந்துகொண்டு, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். தேசிய பொருளாளர் போஸ்லே, தேசிய செயலாளர்கள் சம்பா வர்மா, முகேஷ் ஹால்வ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநாட்டில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    மாநாட்டில் உணவு மருந்துகள் வேளாண் இடுபொருட்கள் மற்றும் எந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கொரோனாவால் பறிக்கப்பட்ட ரெயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் உடல்நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தேசியக்கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.

    அனைவருக்கும் வீடு வழங்குப்படு வதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும். மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைத்து பண்ணை க்குடும்ப ங்களையும் கடன் சுமையிலிருந்து விடுவிக்க விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு நலவாரியத்தில் இருந்து நிதி பங்களிப்போடு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமபுற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத் தொ குப்பு களை யும் திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதற்காக அந்த பகுதியில் பிரமாண்டமான விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

    அப்போது கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., , மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, நெசவாளர் அணி ஆறுமுகம், முரா.கருணாநிதி, அ.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி , சிவராமன் தங்கமுத்து (எ) மருதமுத்து , பேரூர் செயலாளர்கள் பாபு ( எ) வெங்கடேஷ்வரன், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ம.தி.மு.க. மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநாடு நடைபெற உள்ள இடத்தை பூமிநாதன் எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை வலையங் குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    மாநிலம் முழுவதும் இருந்து திரளான ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பூமிநாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் பொருளாளர் சுருதி ரமேஷ்.பார்வையிட்டடனர். இதில் நிர்வாகிகள் சுப்பையா, கீரைத்துரைபாண்டியன் பாஸ்கரசேதுபதி, பச்சமுத்து. புகழ்முருகன், மாயழகு., அய்யனார். காளிமுத்து முத்துலெ ட்சுமி.. கரு.சுந்தர், அன்னமுகமது, கவுரி மகேஷ், திருப்பரங்குன்றம் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாடு பேரணியுடன் தொடங்கியது.
    • பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

    தென்காசி:

    தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11-வது மாநில மாநாடு தென்காசி அருகே உள்ள சக்தி நகரில் இருந்து பேரணியுடன் தொடங்கியது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    பேரணியில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவருமான சவுந்தரராஜன், சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் பாப்பூ, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர்கள் மகாலட்சுமி, செண்பகம், வரவேற்பு குழு தலைவர் முன்னாள் பேராசிரியர் சங்கரி, சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரியமுல்லை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
    • முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் 3 வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.

    முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 

    • எழுச்சி மாநாடு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பமாக திரண்டு வர வேண்டும்.
    • செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கழகத்தின் பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியாரின் தலை மையில் கழகத்தின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரை வளையங் குளம் பகுதியில் நாளை காலை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கழக கண்மணிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கடைகோடி தொண்டர்கள் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் பங்கேற்கிறார்கள்.

    இந்த எழுச்சிமிகு மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் மாநாட்டின் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்து மாநாட்டின் இறுதி வரை பங்கேற்கும் வகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டுக்கோப்போடு எடப்பாடியாரின் ஆணை யை நிறைவேற்றும் சிப்பாய் களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த அணி திரள்வோம் என ராஜன்செல்லப்பா அறிக்கையில் கூறினார்.
    • எடப்பாடியாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும்

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், அ.தி.மு.க .மண்டல செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியுடன் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியாரின் சீரிய தலைமையில் மதுரை யில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக் கிழமை) மிக பிரம்மாண்ட மாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் சங்கமிக்கிறார்கள். இந்த வெற்றி சரித்திரம் படை க்கும் மகத்தான மாநாட்டில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    வீர வரலாற்றின் எழுச்சிமிக்க மாநாட்டில் அனைவரும் பங்கேற்று எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்திட ஒன்றிணைவோம். நாளைய தமிழகத்தின் நிரந்தர முதல் வராக எடப்பாடி யாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அணி அணியாக திரண்டு வந்து ஆர்ப்பரிப்போம், களம் வெல்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    சிவகாசி

    அ.தி.மு.க. வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற் பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசியதா–வது:-

    மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட் டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    நம்முடைய இயக்கத்தினு–டைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன் றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக் கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத் திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

    வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக் கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல் கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

    மாநாட்டிற்கு காலை யிலே 10 மணிக்கு கிளம்பிட வேண்டும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்கு சிரமமின்றி செல்லலாம். கட்சி பொறுப்பாளர்களை, கட்சித் தொண்டர்களை, கிராமத்து இளைஞர்களை, பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக் கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார்.

    அவருடைய அந்த வாக்கை வேத வாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருது–நகர் மாவட்டத்தில் இருந்து பிரச்சினை இல்லாமல் வந்தார்கள், மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப் பாடியார் பேச்சை கேட்டார்கள், ஊர்களுக்கு அமைதி–யாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர் மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரம–ணியன், மாவட்ட எம்.ஜி.–ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலா–ளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை–ஞரணி செயலாளர் பிலிப் வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய ஆனந்த்,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலா ளர் கிருஷ்ண–மூர்த்தி, சரவ ணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கி யம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவ ரணி செயலாளர் ரெங்கபா ளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன்,

    கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வ நத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ள பட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத் தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன்,

    ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத் தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாந கர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    • குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்ப

    கன்னியாகுமரி :

    மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு சம்பந்தமாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாங்கையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி செயலாளர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சலாம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறும் கழக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வாரியாக அதி கமான வாகனங்களில் சுமார் 5000-க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வது. 1989-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி தாக்கிய சம்பவம் குறித்து இப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவதற்கு வன்மையாக கண்டிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், மணி, ஜெயசுதர்சன், குழித்துறை நகர செயலாளர் அழகராஜ், அணி செயலாளர்கள் வழக்கறிஞர் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித்குமார், யூஜின், மனோ, காசிராஜன், ஜாண், மகாஜி செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டார் நன்றி கூறினார்.

    • மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • அடுத்த மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்எல்ஏ, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து .மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது, மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள் இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கப்படும்.

    தமிழக அரசு தற்பொழுது பல்வேறு கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    மேலும் உப்பு நீர் ஊருக்குள் புகாத வகையில் பல்வேறு உப்பனாற்றில் தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துறைமுகங்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர் நலன்களை பாதுகாக்கும் வகையில் அடுத்த மாதம் 18ம் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வ ரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், விஜயகுமார், மலர்விழி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
    • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

    மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

    இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

    இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×