search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞரணி"

    • நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர்.
    • நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்க ளுக்கான நேர்காணல் சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிஜிஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஜெபர்சன், பைஜூ, ஆல்பின் பினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர். இவர்களிடம் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஈரோடு பிரகாஷ், அப்துல் மாலிக், கஜேந்திரபிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார், அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • அருள்பிரபின் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.

    • சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதற்காக அந்த பகுதியில் பிரமாண்டமான விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

    அப்போது கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., , மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, நெசவாளர் அணி ஆறுமுகம், முரா.கருணாநிதி, அ.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி , சிவராமன் தங்கமுத்து (எ) மருதமுத்து , பேரூர் செயலாளர்கள் பாபு ( எ) வெங்கடேஷ்வரன், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
    • மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கலைஞரின் நூற் றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவது, இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.

    • ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
    • 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,

    வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது.
    • 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூர் இளைஞரணி சார்பில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் இளைஞரணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.

    அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகாஈஸ்வரி, பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம் .
    • இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற 24-ந்தேதி திருச்சி யில் மாநாட்டை நடத்துகிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கழகத்தின் 51-வது ஆண்டுவிழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக இளை ஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எந்தவித பதவி ஆசையும் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை கட்டிக்காக்கின்ற விசுவாசி. கடைக்கோடி தொண்டனின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தால் தான் இயக்கத்தை வழிநடத்த முடியும். வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடக்கும் முப்பெரும் விழாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணி, அணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்.

    இந்த விழாவில் 5 லட்சம் இளைஞர்களை திரட்டு வோம். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாநாடு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னாள் எம் பி கோபாலகிருஷ்ணன், முருகேசன்,மாநில நிர்வாகி மருதுஅழகுராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், மாணவரணி மாநில துணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் சோலை குண சேகரன் ஆகியோர் வர வேற்றனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆட்டோ கருப்பையா, கண்ணன், கெம்பையா, பவுன்ராஜ், நாச்சியப்பன், கிரி, சாத்தன உடையார், பத்ரி முருகன், புல்லட் ராமூர்த்தி, இன்பம்,முத்து,பாரப்பத்தி ஊராட்சித்தலைவர் முத்தையா,மற்றும் மேலூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாகச் சென்று இளைஞ ர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேற்கு ஓன்றியம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாம் நகர மன்ற தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்காமராஜ் முன்னிலை வகித்தார். வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஒன்றுஊராட்சிக்கு உட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை கொச்சிகுத்தகைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று இல்லம் தேடி இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கும்பணி நடைபெற்றது. இதில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்அசோக் குமார்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் அணி அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் மேற்கு ஒன்றியதுணை செயலாளர் அருள்அரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
    • தி.மு.க அரசின் சாதனைகளையும், கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர செயலாளர் சுப்ராயன் மற்றும் சீர்காழி, கொள்ளிடங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்.சேது ரவிக் குமார், மலர் விழி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களிடையே தி.மு.க அரசின் சாதனைகளையும், திமுக கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ.கே. செந்தில் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக் கூறினார்.

    ×