search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth wing"

    • நேர்காணல் நாளை மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது.
    • புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை கிழக்கு மாவட்ட த்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை ( சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, ராஜா, இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ஆனந்தகுமார், அப்துல் மாலிக், பிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் வந்து கலந்து கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து வந்து நேர்காணலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.
    • இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    மாவட்ட அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு காலை- மதியம் உணவு வழங்கப்படுகிறது. தி.மு.க. கொடியேந்தி இளைஞர் அணியினர் தைரியமாக மக்கள் பணியாற்ற வேண்டும். தி.முக.வில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஓவ்வொரு பகுதிகளிலும் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டங்களை கண்காணித்து அதை தகவலாக தெரிவித்து அதற்கு தகுந்தாற்போல் நாமும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை. தமிழ் மொழி அழிப்பு என்பது ஓரு இனத்தையே அழிப்பதற்கு சமம், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

    ஜாதி, மதத்தால் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் எதிர்கட்சி களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவரவர் மத வழிபாடுகளை அவரவர் மேற்கொ ள்ளட்டும். இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    25 மரக்கன்றுகள்

    விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பல பிரிவுகளாக பிரித்து கபடி போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு கிளைச்செயலாளரிடம் 25 மரக்கன்றுகன் கொடு க்கப்பட்டு எல்லோருடைய வீட்டிலும் மரம் வளர்க்க வழிவகை செய்யப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    அடுத்து அமையவுள்ள ஆட்சியில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வரும். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு விளாத்திகுளம் தொகுதி முழுமையாக ஓத்துழைப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தீர்மானம்

    கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது, இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகமாக விரைந்து சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர துணைச் செயலளார் பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், முருகேசன், ராதா கிருஷ்ணன், சின்ன மாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், கருப்பசாமி, டேவிட்ராஜ், மகேந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்துராமன், செல்வின், சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த கபரியேல்ராஜ் நன்றி கூறினார்.

    • பாசறை கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாறு குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., மாநில சுயாட்சி குறித்து சூரிய கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி குறித்து நிர்வாகிகள் பேசினர்.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி ஆறுமுகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    • கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது
    • 36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி பள்ளிக்கூட தெரு, பங்களா தெரு, வேலாயுதபுரம், பாரதிநகர் உள்ளிட்ட 36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    இதில், கோவில்பட்டி நகர தி.மு.க., செயலாளரும், நகராட்சி சேர்மனுமான கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்தார். இதில், தி.மு.க., அவைத்தலைவர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், வார்டு செயலாளர்கள் சங்கரபாண்டியன், ராமசாமி, சசிகுமார், வார்டு கவுன்சிலர்கள் லவராஜா, ஜாஸ்மின் லூர்து மேரி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×