கோவில்பட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது எடுத்த படம்
உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது எடுத்த படம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், இல்லம் தோறும் இளைஞரணி என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி பள்ளிக்கூட தெரு, பங்களா தெரு, வேலாயுதபுரம், பாரதிநகர் உள்ளிட்ட 36 வார்டு பகுதிகளிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

இதில், கோவில்பட்டி நகர தி.மு.க., செயலாளரும், நகராட்சி சேர்மனுமான கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்தார். இதில், தி.மு.க., அவைத்தலைவர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், வார்டு செயலாளர்கள் சங்கரபாண்டியன், ராமசாமி, சசிகுமார், வார்டு கவுன்சிலர்கள் லவராஜா, ஜாஸ்மின் லூர்து மேரி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com