search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம்
    X

    மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை, மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் உள்பட கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

    திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம்

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டிற்கு 5 லட்சம் இளைஞர்களை அணி திரட்டுவோம் .
    • இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற 24-ந்தேதி திருச்சி யில் மாநாட்டை நடத்துகிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கழகத்தின் 51-வது ஆண்டுவிழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக இளை ஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியதா வது:-

    அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எந்தவித பதவி ஆசையும் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை கட்டிக்காக்கின்ற விசுவாசி. கடைக்கோடி தொண்டனின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தால் தான் இயக்கத்தை வழிநடத்த முடியும். வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடக்கும் முப்பெரும் விழாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணி, அணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்.

    இந்த விழாவில் 5 லட்சம் இளைஞர்களை திரட்டு வோம். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாநாடு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னாள் எம் பி கோபாலகிருஷ்ணன், முருகேசன்,மாநில நிர்வாகி மருதுஅழகுராஜ், இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், மாணவரணி மாநில துணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் சோலை குண சேகரன் ஆகியோர் வர வேற்றனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆட்டோ கருப்பையா, கண்ணன், கெம்பையா, பவுன்ராஜ், நாச்சியப்பன், கிரி, சாத்தன உடையார், பத்ரி முருகன், புல்லட் ராமூர்த்தி, இன்பம்,முத்து,பாரப்பத்தி ஊராட்சித்தலைவர் முத்தையா,மற்றும் மேலூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×