குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி பொறுப்புக்கு நேர்காணல்

நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி பொறுப்புக்கு நேர்காணல்
Published on

திருவட்டார் :

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்க ளுக்கான நேர்காணல் சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிஜிஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஜெபர்சன், பைஜூ, ஆல்பின் பினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர். இவர்களிடம் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஈரோடு பிரகாஷ், அப்துல் மாலிக், கஜேந்திரபிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார், அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com