என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் அ.தி.மு.க., மாநாடு: கிருஷ்ணகிரியில், ஜெயலலிதா பேரவை சார்பில் வழியனுப்பும் நிகழ்ச்சி
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
- முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி,
மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் 3 வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக அ.தி.மு.க. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Next Story






