search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம்"

    • மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    • ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் உலக ஓசோன் தினத்தை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளி தாளாளர் அருணாச்சலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, புவி வெப்பமய மாதலை தடுக்க மாணவர்கள் அனைவரும் ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி செயலாளர் பாரதியார் ரவிக்குமார் முன்னிலை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் உறுதி மொழி ஏற்றனர்.

    • பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
    • அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விலங்குகள் நடமாடும் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
    • வனத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் விலை உச்சத்தில் இருந்து வந்தன. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்ப சலனம் குறைந்துள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பத்ரகாளியம்மன் கோவில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்திருந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன்பின் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
    • வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உண்டாகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் அருண் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து பேசியதாவது,

    இந்த சிவப்பு கூன்வண்டு தாக்குதல் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அதிக அளவில் தென்னையை தாக்குகின்றன. இயந்திரங்கள் மூலம் உலவும் மேற்கொள்ளும் பொழுது காயங்கள் ஏற்படுவதால் அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன.

    இவ்வாறு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.

    இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளாகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும்.

    இதனை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம் என்றார்.

    மேலும் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினார்.

    தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்து நடுவது குறித்தும், நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த உரம் வேளாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியா ளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள், பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பொன் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும்.
    • தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    சென்னை:

    திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.

    இரு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவு படுத்தப்படுகிறது.

    இதற்காக பாக்கம் புதுக்காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 60 ஆண்டுகள் வயதானவை.

    ரோட்டின் இரு பக்கமும் வரிசையாக நின்ற புளி, வேம்பு, ஆலமரங்கள், அரச மரங்கள் நிழல் தரும் மரங்களாக நீண்ட காலமாக நின்றிருந்தன. இந்நிலையில் தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன.

    இந்த சாலை விரிவாக்க பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றனர்.

    பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும். ரோடு பணிகள் நிறைவடைந்ததும் புதிய மரங்கள் நடும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் விழா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சபி சுலை மான், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாஞ்சோலை துரை, நெட்டூர் கிளைச் செயலாளர் கணேசன், மகேஷ் பாண்டியன், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்ததால் மரங்கள் கீழே விழுந்தன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மின்சாரத் துறையினர் மின்சார கம்பிகளை சரி செய்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கால நிலை மாற்றம் ஏற்பட்டு காற்றின் வேகம் அதிகமாக வீசி வருகிறது.

    இரவில் கோத்தகிரி மிளுதோன் செல்லும் சாலையில் சில்வர் ஊக் மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்து அப்பகுதியில் வெகு நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக மின்சார துறையினர் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்புசாமி முதன்மை அலுவலர் மாதன் தலைமையிலான குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    பின்பு மின்சாரத் துறையினர் மின்சார கம்புகளை சரி செய்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கினர். 

    • இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான்.
    • மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பணப்புழா ஆலக்காடு வலியப்பள்ளி அருகே உள்ள கல்லடம் பகுதியை சேர்ந்த தம்பதி நாசர்-ஜூபைரியா. இவர்களது மகன் முகம்மது ஜூபைர்(வயது9).

    சிறுவன் முகம்மது ஜூபைர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தை நாசர் வெட்டி அகற்ற முயன்றார். அப்போது அந்த மரம் நாசர் வீட்டின் மீது விழுந்தது.

    அந்த இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவன் அங்கிருந்து மீட்கப்பட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பின்பு மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • அடையாறு, காந்தி நகர், 4-வது மெயின் ரோட்டில் 40 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது.
    • அடையாறில் இந்த மரம் குடியிருப்பு அருகே இருந்ததால் வீட்டின் மீது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர்.

    சென்னை:

    அடையாறு, காந்தி நகர், 4-வது மெயின் ரோட்டில் 40 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது. குடியிருப்பு அருகே இருந்த இந்த மரம் சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு அதன் கீழ்ப்பகுதி தனியாக வேர் பாதிக்கப்படாமல் பிடுங்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தை கிரேனின் உதவியுடன் கோட்டூர்புரத்தில் மியாவாக்கி காடுகளுக்காக மரங்கள் பராமரிக்கப்படும் இடத்தில் நடப்பட்டது. புதிதாக நட்ட மரத்தின் வளர்ச்சியை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிஅதிகாரி ஒருவர் கூறும்போது, அடையாறில் இந்த மரம் குடியிருப்பு அருகே இருந்ததால் வீட்டின் மீது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். எனவே மரத்தை அகற்ற, குடியிருப்போர் நல சங்கத்தினர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

    எனவே மரத்தை வேராடு பிடுங்கி கோட்டூர்புரத்தில் இடத்தை தேர்வு செய்து வைத்தோம். இதில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். மரத்தின் வேர்களின் மையப் பகுதி சேதமடையாமல் பெரிய குழி தோண்டி கிரேனின் உதவியுடன் முழுவதும் எடுக்கப்பட்டது என்றார்.

    • கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
    • காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கருவளர்ச்சேரி ஊராட்சி பகுதியில் கும்பகோணத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

    இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன எந்திரம் மூலம் காரை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.

    இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×