பலத்த காற்றால் அரசு மருத்துவமனையின் அருகில் இருந்த ஆட்டோ மீது சாய்ந்த மரங்கள்

பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.
ஆட்டோ மீது மரம் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
ஆட்டோ மீது மரம் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.

இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com