search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார்"

    • பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி சென்றவர் மாலை அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் காண வில்லை. இதுகுறித்து வீராணம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • புகார் மனு அளிக்க 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
    • 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் அங்கே விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை, ரெயில்நிலைய சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. துணை கமிஷனர் தீபக் சிவாஜ் பங்கேற்றார்.

    இதில் புகார் மனு அளிக்க 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மனுதாரர் மற்றும் எதிர்தரப்பினர் சிலரிடம் அங்கேயே விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் அங்கே விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டது. இதில் உதவி கமிஷனர் ரூபன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.

    • போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
    • பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.

    தொழில் நிறுவனங்கள்

    மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,

    500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.

    குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.

    கூடுதல் போலீஸ்

    இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.

    பொதுமக்கள் அதிருப்தி

    பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.

    ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சங்கர் (26). இவருக்கும் சந்தியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமான மூன்று மாதத்தில் மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி கரிய பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சங்கர் (26). இவருக்கும் சந்தியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா கடைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமான மூன்று மாதத்தில் மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியில் கன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த உண்டி யல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கோவிலை உடைப் பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பப்பது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சந்தேகப்படும்படியாக நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் கோவிலில் உண்டியல் திருடியதை ஒப்புக்கொண் டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மயிலாடி அமராவதிவிளை பகுதியை சேர்ந்த மரிய சேவியர் (வயது 32) என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மரிய சேவியர் மீது ஏற்கனவே அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் உண்டியல் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இளம்பெண், பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மூஞ்சிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவரது மகள் ஜென்சி(வயது23). இவருக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. பெற்றோர் வீட்டில் இருந்து பி.எட் படித்து வந்தார்.

    படிப்பு முடிவை டைந்ததால் கணவர் வீட்டிற்கு செல்லுமாறு ஜென்சியிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் கணவர் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இந்த நிலையில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் ஜோதிராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் துர்காதேவி(38),பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துர்காதேவி வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி நாலூர் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி(37). இவரது 17 வயது மகன் ஐ.டி.ஐ. படித்து விட்டு மதுரையில் வேலை பார்த்து வருகிறான். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தட்டனூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    சேலம்:

    76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங் களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கலெக்டர் கார்மேகம், தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை அந்தந்த பள்ளியில் நடந்து வருகிறது.

    • சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    • 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடக்கிறது. விழா வில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடு கிறார்.

    பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார். சுதந்திர தின விழாவை யொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக ஆயுதப் படை மைதானத்தில் நடந்தது. இன்று நாகர்கோ வில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைய டுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் வெளியூர்க ளில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகி றார்கள்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கடற்கரை கிரா மங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர காவல்துறையினர் நவீனபடகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    • முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    தக்காளி

    சாலையில் சென்ற போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த வர், தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாக னத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    இது குறித்து நல்லிபாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பெண்ணி டம் பணம் கொள்ளை யடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
    • சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சீட்பெல்ட் அணியாதவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என பல்வேறு விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 6 மாதத்தில் ஜூன் மாதம் வரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் லைசென்சை போலீசார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    அதிவேகமாக சென்ற 7 ஆயிரத்து 57 பேர் சிக்கியுள்ளனர். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 748 வழக்குகளும், போடப்பட்டு உள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 272 பேர் சிக்கியுள்ளனர்.

    சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • 3 நாட்கள் ஆன பிறகும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் பக்கம் உள்ள கடலில் கடந்த 2-ந்தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டி ருந்தது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த வாலிபரின் பிணத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி முழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை கொண்டு வந்து கடலில் வீசினார்களா? அல்லது அவர் வேறு எங்காவது கடலில் மூழ்கி இறந்து அவரது உடல் அலையில் இழுத்து கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி கடற்கரை யில் கரை ஒதுங்கியதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? என்பது குறித்து 3 நாட்கள் ஆன பிறகும் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீ சார் திணறி வருகிறார் கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபரின் சட்டை மற்றும் பேண்டில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால் இந்த நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    • பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாகத்திற்காகவும், 3-ம் சுரங்கம் அமைப்பதற்காகவும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி, கரிவெட்டி போன்ற கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இங்கு கடந்த ஒரு வாரகாலமாக வாய்க்கால் அமைக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அங்கு பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டமும், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

    அங்குள்ள மக்களை காண்பதற்காக வந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தினமும் திருப்பி அனுப்படுகின்றனர். இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர். இவர்களை அங்கிருந்த போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் தடுத்து நிறுத்தினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். இதையடுத்து அங்கேயே கோஷங்கள் எழுப்பி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×