என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில்போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
    X

    சுதந்திர தினவிழாவையொட்டி சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் இன்று காலை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில்போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

    • 76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    சேலம்:

    76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங் களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கலெக்டர் கார்மேகம், தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை அந்தந்த பள்ளியில் நடந்து வருகிறது.

    Next Story
    ×