search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமிக்க"

    • வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
    • நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டு உள்ளது. வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.

    அவர் பதவி உயர்வு பெற்று கோவை பகுதிக்கு சென்றதால் வால்பாறை நகராட்சிக்கு, உடுமலை நகராட்சி ஆணையாளர் பெற்பெட்டி டெரன்ஸ் லியோ என்பவர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தையும் சேர்த்து பார்த்து வருகிறார்.

    இவர் உடுமலையில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே இங்கு வந்து செல்வதால் நகராட்சி பணிகள் தோய்வடைகின்றன. எனவே வால்பாறை நகராட்சிக்கு என்று தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
    • பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.

    தொழில் நிறுவனங்கள்

    மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,

    500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.

    குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.

    கூடுதல் போலீஸ்

    இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.

    பொதுமக்கள் அதிருப்தி

    பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.

    ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார்.
    • பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல்தொரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உயில்ஹட்டி, கூக்கல், கூக்கல்தொரை ஹட்டி, ஜீவா நகர், மசக்கல், தீனட்டி, பாரதி நகர் மற்றும் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.

    கூக்கல்தொரை ஊராட்சிக்கு என்று தனியாக செயலர் இல்லை. பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார். அவர் 2 ஊராட்சிகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் தங்கள் பகுதியில் அனைத்தும் வேலைகளும் தடைபடுவதாகவும், பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கூக்கல்தொரை ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக செயலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார்.
    • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார். அவர் பெரும்பாலும் கீழ் குந்தா அலுவலகத்திலேயே உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை செயல் அலுவலரிடம் கூற 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே பொதுமக்களின் பணிகளை விரைந்து முடிக்கவும், அவர்களுக்கு உரிய பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கவும் உடனடியாக உலிக்கல் பேரூராட்சி பகுதிக்கு நிரந்தர செயல் அலுவலர் பணிமடுத்தப்பட வேண்டும்.

    காலதாமதம் ஏற்பட்டால் அ.தி.மு.க சார்பாக 12-வது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 100 காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு உத்தரவிட்டுள்ளது.
    • பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, நடுநிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதன்பிறகு, ஆசிரியா் பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், கொல்லிமலை ஒன்றியத்தில் 41 காலியிடங்களும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 9 இடங்களும், இதர ஒன்றியங்களில் 21 பணியிடங்கள் என மொத்தம் 71 இடங்களில் இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்தவும், 15 பட்டதாரி ஆசிரியா்கள், 14 முதுநிலை ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

    அந்தந்த ஒன்றியத்திற்கு உள்பட்டவா்கள் காலியிடங்கள் உள்ள பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக அறிந்து தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம், சான்றிதழ்களை வழங்கி, தங்களுடைய பாடப்பிரிவுக்கான பணியிடம் காலியாக இருப்பின் வேலைவாய்ப்பு கோரலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×