என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூக்கல்தொரை ஊராட்சிக்கு தனி செயலளர் நியமிக்க வேண்டும்
- பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார்.
- பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல்தொரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உயில்ஹட்டி, கூக்கல், கூக்கல்தொரை ஹட்டி, ஜீவா நகர், மசக்கல், தீனட்டி, பாரதி நகர் மற்றும் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.
கூக்கல்தொரை ஊராட்சிக்கு என்று தனியாக செயலர் இல்லை. பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார். அவர் 2 ஊராட்சிகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் தங்கள் பகுதியில் அனைத்தும் வேலைகளும் தடைபடுவதாகவும், பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே கூக்கல்தொரை ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக செயலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






