சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை

முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.
சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை
Published on

நாமக்கல்:

நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தக்காளி

சாலையில் சென்ற போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த வர், தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாக னத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

இது குறித்து நல்லிபாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பெண்ணி டம் பணம் கொள்ளை யடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com