search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் கொள்ளை"

    • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியில் கன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த உண்டி யல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கோவிலை உடைப் பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பப்பது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சந்தேகப்படும்படியாக நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் கோவிலில் உண்டியல் திருடியதை ஒப்புக்கொண் டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மயிலாடி அமராவதிவிளை பகுதியை சேர்ந்த மரிய சேவியர் (வயது 32) என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மரிய சேவியர் மீது ஏற்கனவே அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் உண்டியல் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது.
    • கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்று தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து தினமும் பிரார்த்தனைகள் நடந்தது. இன்று காலையில் ஆலயத்தின் மின் விளக்கை அணைப்பதற்காக தலைவர் எப்ரின் ரவி சென்றார். அப்போது ஆலயத்தின் முன்பிருந்த அந்தோணியார் கெபி அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் ஆலயத்தின் கதவும் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தின் உள்ளே இருந்த மரப்பெட்டி உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து எப்ரின் ரவி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்றும் இதனால் உண்டியலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்ததாகவும் தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கோவில் வளாகத்தில் நாகாத்தம்மனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
    • கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் திருடு போனது தெரியவந்தது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் நாகாத்தம்மனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை தூக்கிச் சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் முன்பக்க கேட் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பூசாரி கோவில் தர்மகத்தா வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 2 வாலிபர்கள் கோவிலுக்குள் வந்து உண்டியல்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து சி சி டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேவி கருமாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • தேவி கருமாரியம்மன் கோவிலில் இதற்கு முன்பும் 2 முறை கொள்ளை நடந்து உள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அவ்வழியே சென்றதால் மர்ம கும்பல் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த கோவிலில் இதற்கு முன்பும் 2 முறை கொள்ளை நடந்து உள்ளது. தற்போது 3-வது முறையாக கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து உள்ளனர்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×