search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு கொண்டாட்டம்"

    • நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.
    • புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதையொட்டி புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் மதுபான விருந்துகளுடன் பல்வேறு விதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    புதுவை கடற்கரையிலும் ஆட்டம்-பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாடப்படும். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.

    இதனால் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது. நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடற்கரை சாலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமை தாங்கினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் வரும் பாதைகளில் வாகனங்கள் நிறுத்த கூடாது.

    வாகனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளை தாண்டி கடலில் யாரும் செல்லக்கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும்.

    அதேபோல் கடற் கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் முடியும் வரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் எங்கெங்கு பணியில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்துவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு முதல் புதுவை-தமிழக எல்லைகளான கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் ரோடு, விழுப்புரம் சாலை, கடலூர் ரோட்டில் உள்ள எல்லை பகுதிகளான கன்னியக்கோவில், கோரிமேடு, கனக செட்டிக்குளம், மதகடி பட்டு ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    • ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.
    • அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.

    இந்நிலையில் இன்று 2023-ம் வருடத்தின் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு அதில் GOOGLE என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் 3-வது எழுத்தாக உள்ள O என்ற எழுத்தில் உருண்டை மாதிரி இடம்பெற்றுள்ளது.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்பு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க யாரும் வரவேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.
    • புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள்.

    புதுச்சேரி:

    புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.

    அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • 9 பேர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடலில் இறங்கி குளித்தனர்.
    • இன்று காலை பிரசாத் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சிவதான் (வயது 46). இவர் நிகழ்ச்சிகள் நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணி புரிகின்றனர். 2024 புத்தாண்டை கொண்டாடும் வகையில் இவரும், இவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கானத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு புத்தாண்டை கொண்டாடுவதற்கு ரிசார்ட்டை முன் பதிவு செய்தனர்.

    நேற்று மாலை அனைவரும் கானத்தூர் சினேகா கார்டன் கடற்கரைக்கு சென்றனர். அவர்களில் 9 பேர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று 9 பேரையும் இழுத்து சென்றது. இதில் 2 பேர் மட்டும் தப்பி கரை சேர்ந்தனர். மீதமுள்ள 2 பேர் மீட்கப்பட்டனர். சிவதான், அவரது மகள் நிவிதா (19), நவீன் (26), மானஸ் (18), பிரசாத் (18) ஆகிய 5 பேரை கடல் அலை இழுத்து சென்றது.

    இதையடுத்து, போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் கானத்தூர் பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான 5 பேரையும் தேடினர். இதில் சிவதான், நவீன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். நிவிதாவை கடல் அலை 2 கி.மீ. தூரம் இழுத்து சென்றது. இதையடுத்து கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று நிவிதாவை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான பிரசாத், மானஸ் ஆகியோரை தேடி வந்தனர். கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசன், கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி, சப்-இன்ஸ்பெக்டர் துரைமுருகன் மற்றும் கானத்தூர் போலீசார் படகில் இரவு முழுவதும் இருவரையும் தேடினார்கள்.

    மேலும் கடலோர காவல் படையினர், கடற்படையினர், தீயணைப்பு படையினர், மீனவர்கள் ஆகியோரும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். உத்தண்டி முதல் மாமல்லபுரம் கடற்கரை வரை தேடினார்கள். அதேபோல ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை பிரசாத் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மேலும் மானஸ் இன்னும் கிடைக்கவில்லை. அவர் கடல் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் கடல் அலையில் சிக்கி 4 பேர் பலியானது தெரியவந்துள்ளது. மானஸ் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புத்தாண்டை கொண்டாட சென்று 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர்.
    • தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது.

    நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நாளை இரவு 7 மணியில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நாளை இரவு ஈடுபட உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் சுதாகர் மற்றும் இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. மெரினாவில் நாளை இரவு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக அவர்களது கைகளில் அடையாள வளையம் ஒன்றும் கட்டப்படுகிறது.

    அதில் பெற்றோர்கள் மற்றும் போலீசாரின் உதவி எண்கள் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் காணாமல் போய் தவிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்பதால் இந்த நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

    அதில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரில் நாளை நள்ளிரவில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு விட்டு மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மதுபோதையில் வருபவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை நாளை நள்ளிரவில் மூடுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு தினத்தில் வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள் அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ. குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இதுபோன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப் படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும். ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேர்க்கப்பட்டு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    • புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை தொடர்ந்து புதுவையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    ஒயிட் டவுன் மற்றும் நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். புத்தாண்டை வரவேற்கும்விதமாக புதுவை கடற்கரை சாலை, நட்சத்திர விடுதிகள், மது பார்கள், ரெஸ்டோபார்கள், கடற்கரை கேளிக்கை இடங்கள் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டை கொண்டாடுவதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாகவே வர தொடங்கிவிட்டனர்.

    இன்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன. அறைகளில் தங்க வழக்கமான நாட்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.

    அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர பகுதியில் நெரிசலை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினார். அப்போது சில ஆலோசனைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் முகம் சுளிக்காமல், கனிவோடு நடந்து கொள்ளும்படியும் போலீசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.

    இதனிடையே உள்ளாட்சித்துறை ஓட்டல் மற்றும் திறந்த வெளியில் நிகழ்ச்சியில் நடத்துவோர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதி பெற்ற எண்ணிக்கையில் மட்டும்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நபர்களை அனுமதிக்க வேண்டும்.

    அவர்களுக்கு உறுதியளித்தபடி மது வகைகள், உணவுகளை வழங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள், முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அனுமதியில்லாமல் புத்தாண்டு கொண்டாட வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
    • புத்தாண்டு அன்று இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக்கூடாது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல்வேறு ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. இங்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    எனவே கோவையின் வனப்பகுதியை ஒட்டிய விடுதிகளில் தங்கியிருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் அங்குள்ள ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்யத்தொடங்கி உள்ளனர். இதனால் கோவையின் வனப்பகுதியை ஓட்டி அமைந்து உள்ள ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன.

    இதற்கிடையே கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    அதன்படி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், நடத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும்வகையில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

    விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை நிகழ்த்தக்கூடாது. கேம்ப் பயர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மேலும் வாகனங்களில் அதிக ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. மது குடித்துவிட்டு வனப்பகுதியில் வாகனங்களை இயக்கக்கூடாது. மேலும் புத்தாண்டு அன்று இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக்கூடாது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீணாகும் உணவுப்பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் கொட்டக்கூடாது. தங்கும் விடுதிகளுக்கு அருகில் வன விலங்குகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக விரட்ட முயலாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையின் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள விடுதி உரிமையானர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட விடுதிகளின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இது வனப்பகுதியை ஒட்டி புத்தாண்டு கொண்டாடுவதற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்ட தினமான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் 'அடையாள வளையம்' கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையை சென்னை மாநகர போலீசார் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றி வருகிறார்கள். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
    • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

    இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான புதுச்சேரி பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில் 2024-ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போது தயாராகி வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி செல்வது வழக்கம். அதுபோன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச்ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலா பயணிகள் வேகமாக முன் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    மேலும் டிசம்பர் 31-ந் தேதி இரவு முதல் நள்ளிரவு வரை வர்த்தக சபை, பாண்டி மெரீனா, அசோகா பீச் ரெசார்ட், ஓட்டல்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது. குறிப்பாக பாண்டி மெரீனா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு இசை நிகழ்ச்சிக்காக ஆண்களுக்கு தலா ரூ.3,500 ஆகவும், பெண்களுக்கு தலா ரூ.2,500 ஆகவும் என குறைந்தபட்ச நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந் நிகழ்ச்சிகளில் அளவற்ற அசைவம் மற்றும் சைவ உணவு, மதுபானம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தாண்டு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சீகல்ஸ் கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, காரைக்கால் சீகல்ஸ் ஆகிய 4 இடங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான நிகழ்ச்சிகளை தனியார் மூலம் நடத்தி கொள்ள ஒப்பந்த புள்ளி வரவேற்கப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு புதுவை கடற்கரை சாலை காந்தி திடல் மற்றும் பாண்டி மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    அதேபோல், இந்தாண்டும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் குவிந்து புத்தாண்டை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதே புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வர தொடங்கி உள்ளனர்.

    • வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
    • 150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி நட்சத்திர ஓட்டல்களில் தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.

    வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.

    ×