search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல இலவச பஸ்கள்... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
    X

    புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல இலவச பஸ்கள்... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

    • கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.
    • புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள்.

    புதுச்சேரி:

    புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.

    அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×