search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டூடுல்"

    • ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.
    • அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம்.

    இந்நிலையில் இன்று 2023-ம் வருடத்தின் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் என்பது நீலம், பச்சை, சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு அதில் GOOGLE என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் 3-வது எழுத்தாக உள்ள O என்ற எழுத்தில் உருண்டை மாதிரி இடம்பெற்றுள்ளது.

    • கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
    • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.

    மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

    • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.
    • குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பிரபல நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் எப்பொழுதும் பண்டிகை தினம் போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு டூடுலை அதன் பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

    அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.

    அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.

    ×