74-வது குடியரசு தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது. குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது.
74-வது குடியரசு தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
Published on

புதுடெல்லி:

பிரபல நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் எப்பொழுதும் பண்டிகை தினம் போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு டூடுலை அதன் பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.

அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com