search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலு"

    • பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
    • இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்தார்.

    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லேன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார்.

    காதல் கலந்த காமெடி கதையம்சம் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.

     


    இந்த நிலையில், பெரும் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கிரிஷ்ஏ.டி. இயக்கும் இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரிக்கின்றனர்.

    கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரன் ஜோசி இணைந்து எழுதி இருக்கும் பிரேமலு 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

    கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.
    • இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.

    இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.

    இதில் மமிதா பைஜு, நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில் அமைந்த கதைக்களம் மக்களிடையே மிக்ப் பெரிய வரவேற்பை பெற்றது.

    கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

    பின் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மார்ச்15 ஆம் தேதி வெளியாகியது பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.

    மக்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

     

    பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏப்ரல் 12 வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
    • மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியது.

    மார்ச் 15 ஆம் தேதி தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. பெருமளவு இளைஞர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 128 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

    நடிகர் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் வசூலை முறியடித்து மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது. பிரேமலு திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேமலு படம் தமிழிலும், தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியிட்டனர்.
    • மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.

    பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து இருந்தனர்.

    மலையாள பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100 கோடியை தாண்டிய நிலையில்மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.

    மலையாள படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு படம் தமிழிலும், தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியிட்டனர்.. தெலுங்கு மற்றும் தமிழ் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரேமலு படத்தின் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். "இப்படி ஒரு அழகான, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்த படக்குழுவிர்கு எனது வாழ்த்துக்கள்" என பாராட்டியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
    • அவர் நடித்த படங்கள் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    கிரிஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மலையாள படம் "பிரேமலு." இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இதில் நடித்த மமிதா பைஜூவை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மமிதா பைஜூ பல்வேறு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

     


    இந்த நிலையில், தனக்கு பிடித்த நடிகர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மமிதா பைஜூ தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    "அல்லு அர்ஜூனை எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான படங்களை 10 முறைக்கும் அதிகமாகவே பார்த்திருக்கிறேன். எனினும், படங்களை பார்க்க வேண்டும் என்றால் அல்லு அர்ஜூன் நடித்த படங்களை நிச்சயம் பார்ப்பேன்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
    • OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 




     

    இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார். 

    இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில்  இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     

    • வருகிற 15 - ந்தேதி தமிழில் இப்படம் 'டப்பிங்' செய்தும் வெளியிடப்படுகிறது
    • மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல், காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் செய்துள்ளது. பிரேமலு படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியைத் தாண்டியது. வருகிற 15 - ந்தேதி தமிழில் இப்படம் 'டப்பிங்' செய்தும் வெளியிடப்படுகிறது.

    மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது
    • உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது

    மலையாள மொழியில் தயாராகி வெளியான படம் 'பிரேமலு'.இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடித்து உள்ளனர்.

    இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது.

    இந்த படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ்,ஹாட் ஸ்டார், வாங்கியது. பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த படம் தெலுங்கு மொழியில் 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் மொழியிலும் இப்படத்தை 'டப்பிங்' செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது வருகிற 15- ந்தேதி அன்று தமிழில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் இணையதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்

    • 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

    கடந்த மாதம் 9-ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.

    மாமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது. 

    சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தமையால் படக் குழுவினர் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி, வரும் மார்ச் 8-ஆம் தேதி தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    ×