பிரேமலு ஓடிடி ரிலீஸ் எப்போது?

பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.
பிரேமலு ஓடிடி ரிலீஸ் எப்போது?
Published on

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.

இதில் மமிதா பைஜு, நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில் அமைந்த கதைக்களம் மக்களிடையே மிக்ப் பெரிய வரவேற்பை பெற்றது.

கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

பின் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மார்ச்15 ஆம் தேதி வெளியாகியது பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.

மக்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏப்ரல் 12 வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com