பிரேமலு ஓ.டி.டி. ரிலீஸ் அப்டேட் வெளியானது

இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரேமலு ஓ.டி.டி. ரிலீஸ் அப்டேட் வெளியானது
Published on

தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com