search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் பலாத்காரம்"

    • வாலிபர் கைது
    • பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற பரிதாபம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25), வெல்டிங் ஷாப் நடத்தி வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    மேலும் விஸ்வநாதன், சிறுமியை கடந்த 22-ந் தேதி ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றார். அதே பகுதியில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, விஸ்வநாதன் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிரவு தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் விஸ்வநாதன் கடந்த 24-ந் தேதி குடியாத்தம் பஸ் நிலையத்தில் சிறுமியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    • சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    போபால்:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது மதிக்கத்தக்க அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றார்.

    அவர்கள் இருவரும் ஜார்க்கண்டில் இருந்து சூரத்துக்கு சென்றபோது இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறினார்கள். அந்த ரெயிலில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரது நண்பர் கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார். ஆனால் 2 கிராமங்களில் இருந்து மக்களிடம் அவர் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.

    இதையடுத்து அவர் 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டார். அந்த கிராமத்தில் வசித்த ஒரு வயதான தம்பதிகள் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணுக்கு ஒரு சேலையை கொடுத்து அணிவித்தனர்.

    பின்னர் அவரது காயங்களுக்கு மருந்து தடவினார்கள். அதன்பிறகு அந்த பெண்ணும், அவரது நண்பரும் மருத்துவமனைக்கு செல்லவும் உதவினார்கள். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
    • அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று மாணவி வீட்டிற்கு வந்தார்.

    அப்போது பெற்றோரிடம் கதறி அழுதார்.தன்னை சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது21) என்பவர் கடத்தி சென்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறினார். இதை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவி கொடுத்த புகாரில் சுங்கான் கடையை சேர்ந்த மணிகண்டன் தன்னை கடத்தி சென்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .நேற்று அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது அங்கிருந்து நான் தப்பித்து வந்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதையடுத்து போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார்.
    • தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார்.

    அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதை பார்த்த பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். பின்னர் தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    அங்கு போதையில் இருந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரித் விகால் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்தார். அப்போது தான் உடுத்தியிருந்த உடைகள் களைந்து கிடப்பதையும், உடலில் ரத்த காயங்கள் இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் பிரித் விகாலை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர் போதையில் இருந்த இளம்பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கி சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கில் பிரித்விகாலுக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார்.
    • போதகர் வினோத் ஜோஸ்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    வேலூர் மாவட்டம் எழிலநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா (வயது40).

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அங்கு நடைபெறும் வகுப்பிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    மேலும் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த இளம்பெண்ணை, போதகர் மிரட்டி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    எனினும் தொடர்ந்து தொந்தவு செய்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் அழுதவாறே நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

    அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண், சிறுமியாக இருந்த போதே அவரிடம் போதகர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததும், பின்னர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போதகர் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
    • பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் அந்த சிறுமியை வளர்க்க முன்வரவில்லை. இதனால் செல்லூரில் உள்ள தந்தை வழி பாட்டி பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார்.

    அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு அங்கு வந்த அவரது தாய் தனது மகளை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார். இதற்காக தினந்தோறும் இரவு சிறுமிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் சில காமுகர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அப்போது சிறுமியின் உடலிலும் சிகரெட் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்தில் மகள் கருவுறாமல் இருப்பதற்காக தாய் மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளான அந்த சிறுமி தனது தாயிடம் இருந்து தப்பி பாட்டியிடம் வந்து சேர்ந்தார். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி உடனே போலீசில் புகார் செய்ய திட்டமிட்டார். இதையறிந்த விபசார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவன் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட்வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.

    ஆனால் சிறுமியின் பாட்டி இந்த விவகாரம் தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 13 வயது சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது உண்மை என தெரியவந்தது. அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பெற்ற மகளையே பணத்துக்காக தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம்
    • சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார்.

    பெரியப்பா உறவு முறையான கூலி தொழிலாளி சிறுமி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் தாயார் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அப்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

    பின்னர் சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    • கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது.
    • தலைமறைவான மவுலியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் இக்கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது. இங்கு விபச்சாரம் அதிக அளவு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை, கொரட்டூரை சேர்ந்த பிரியதர்ஷினி(வயது23) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குகன்(வயது24) என்பவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள கார்த்திக் லாட்ஜுக்கு இளம் பெண்ணை அழைத்து வந்து தங்க வைத்தார்.

    பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் கார்த்திக்(வயது35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அநாகரீகமாக பேசி திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மவுலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் என்பவர் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்றும், முடி வியாபாரி என்றும், தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் கடந்த 25-ந்தேதி வேலைக்காக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்து இறங்கினேன்.
    • எனக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரும் நகை, பணத்தை பறித்து சென்று விட்டனர்.

    திருப்பூர்:

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை கீழ செல்லையாபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் சூர்யா (வயது 33). இவர் இன்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 25-ந்தேதி வேலைக்காக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்து இறங்கினேன். அப்போது அங்கு வந்த சரண், பாண்டி மற்றும் ஒருவர் ஆகியோர் என்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்து உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம். எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தனர். அதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன்.

    இதையடுத்து அவர்கள் என்னை கரூருக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள லாட்ஜில் என்னை தங்க வைத்தனர். அப்போது அவர்கள் எனக்கு பழ ஜூஸ் கொடுத்தனர். அதை குடித்ததும் சிறிது நேரத்தில் மயங்கி விட்டேன். அதன்பிறகு எழுந்து பார்த்தபோது நான் அணிந்திருந்த அரை பவுன் தங்க செயின், கால் கொலுசு, செல்போன் மற்றும் ரூ.50ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

    எனக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரும் நகை, பணத்தை பறித்து சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சூர்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மயக்க மருந்து கொடுத்து தன்னை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததுடன், நகை, பணத்தை கும்பல் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.
    • சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஆதார் அடையாள அட்டை திருத்தி கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மருத்துவ துறை இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரும் சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

    இதுதவிர சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் இது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கொடுமை என்னவென்றால் கன்னி தன்மையுடன் இருப்பவர்களின் கருமுட்டை பயன்பெறாது என்பதால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருமுட்டையை எடுத்துள்ள செயல் கொடூரமான செயல் ஆகும்.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளின் தவறு நிரூபிக்கப்பட்டால் தயவு தாட்சனையின்றி அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது சம்பந்தமாக சென்னை மருத்துவதுறை இணை இயக்குனரகத்தின் மருத்துவகுழு விசாரணை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடர்ந்து கருமுட்டையை தானமாக கொடுத்து வந்த ஒரு பெண் தனது மகளையும் கருமுட்டை கொடுக்க வைத்துள்ளார். இதில் சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி சிறுமியின் வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளளனர்.

    பொதுவாகவே ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆயிரக்கணக்கான கருமுட்டையுடன் பிறக்கும். அது பூப்பெய்தும்போதுதான் கருமுட்டை வளர்ச்சி அடைகிறது. பொதுவாகவே கர்ப்பப்பையின் இரண்டு பக்கங்களிலும் மாதத்திற்கு ஒரு கருமுட்டை உருவாகும். ஒரு மாதம் இடதுபக்கம் கருமுட்டை உருவானால் அடுத்த மாதம் வலது பக்கம் கருமுட்டை உருவாகும். இந்த கருமுட்டைகளை விந்தணுக்கள் துளைக்கும்போது கர்ப்பம் உருவாகிறது.

    எனவே கருமுட்டை வளர்ச்சி என்பது வேறு. பாலியல் தொல்லை என்பது வேறு. இதை தெரியாமலேயே சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி அவரது வளர்ப்பு தந்தை சிறுமியை பலமுறை கற்பழித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×