என் மலர்
புதுச்சேரி

சிறுமி பாலியல் பலாத்காரம்- காவலாளி உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
- சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
- சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






