என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம்
- வாலிபர் கைது
- பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற பரிதாபம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25), வெல்டிங் ஷாப் நடத்தி வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
மேலும் விஸ்வநாதன், சிறுமியை கடந்த 22-ந் தேதி ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றார். அதே பகுதியில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, விஸ்வநாதன் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிரவு தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் விஸ்வநாதன் கடந்த 24-ந் தேதி குடியாத்தம் பஸ் நிலையத்தில் சிறுமியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
சிறுமியை மீட்ட பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.






