search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்கள்"

    • வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
    • சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.

    மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.

    பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.

    வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.

    எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

    சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.

    மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.

    மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.

    அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

    * வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

    * எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

    * வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

    * எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.

    * அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

    * 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

    • காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
    • 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.

    • பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

    நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

    பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.

    மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.

    இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.

    ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 13 அடி உயரம், 23 அடி சுற்றளவு உள்ள லிங்கம் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–பட்டுள்ளது.
    • மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருவுடையாருக்கு மகா தீபாராதனை.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்–கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–கட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

    • அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை

    கன்னியாகுமரி:

    தக்கலை பஸ்நிலையம் அருகில் தாலுகா அலுவலகம், கிராம அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு காலை, மாலை வேளையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாலையோரம் பழ வியாபாரங்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போலியான கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அழுகிய பழங்களை விற்பனை செய்து வருகின்ற னர். நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாம்பழம் வாங்கியுள்ளார். பழத்தை வாங்கி பார்த்த போது அழுகி புழுக்கள் இருந்தன. உடனே கடைகாரரிடம் தகராறில் ஈடுபட்டார். இதே நிலைதொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல வகை நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    தக்கலை பிரபல பல் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோர கடைகளில் கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
    • இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.

    திருப்பூர் :

    நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

    திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.
    • பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர்சந்தையும் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை தென்னம்பாளையம் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.இந்தநிலையில் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே திருப்பூர் பல்லடம் சாலையில் பழ வியாபாரிகள் சிலர் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி வரை சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என தென்னம்பாளையம் மார்க்கெட் -உழவர்சந்தை வியாபாரிகள், விவசாயிகள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.

    இந்தநிலையில் கடைகளை அகற்றியதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், தென்னம்பாளையம் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென சாலையோர பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    மேலும் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் பழங்களை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு வியாபாரிகள் மறியலை கைவிட்டனர். 

    • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
    • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    • திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    • தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவிலில் பெரியகோவில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.இதில் திரளான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட இந்த கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழுந்தைபாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க திருக்கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வயைல், சீப்பு, குங்குமச்சிம்ழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், தாம்பூலம், ரவிக்கை துணடி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்கநாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

    இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இதில் திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பழங்கள் செயற்கை முறையில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பண விரயமும் ஏற்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழியில் பெரும்பா லான கடைகளில்செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வை க்கபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.இதனை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்திட வலியுறு த்தப்பட்டுள்ளது.

    சீர்காழியில்மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் செயற்கை முறை யில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்கவைக்கப்படுவதாக நீண்ட நாட்களாகபொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வகை பழங்களைவாங்கி சாப்பிடும்போது உடல்உ பாதை, வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை போன்றபிரச்ச னைகள் வரும்என மருத்துவ ர்கள்தெரிவிக்கி ன்றனர்.

    குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது செயற்கைமுறையில் பழுக்கவைத்த பழங்களால் பெரும் பாதிப்பு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இயற்கையான முறையில் பழுத்தபழங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்த பழங்கள் எவை, எவை என பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பணவி ரயமும்ஏற்படுகிறது. செயற்கைமுறையில் பழங்கள் பழுக்கவைக்க ப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை பொருட்படுத்துவதில்லை.இதனால் பொதுமக்கள்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஆகையால் சீர்காழி பகுதியில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்கவைத்து விற்பனை செய்யும் கடை உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×