search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Markets"

    • காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
    • 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி என ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் காய்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதனால் வெளி இடங்களை விட காய்கறிகள் விலை இங்கு மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் இங்கு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.50 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரத்து 565 மதிப்பி லான 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.

    இதன் மூலம் 26 லட்சத்து 45 ஆயிரத்து 408 நுகர்வோர்களான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதியில், உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.

    தமிழக அளவில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தினமும் 100 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு வருகிறது. தினமும் 370 முதல் 380 விவசாயிகள் காய்கறி விற்கின்றனர்.

    கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காய்கறிகள் விற்கப்படுவதும், வாடிக்கையாளர் பயன்பெறுவதும் தெரிய வந்துள்ளது.

    கடந்த சில வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளின் சராசரி வியாபாரம் கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்தினமும் 165 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    அதாவது தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு தினமும் 645 வியாபாரிகள் வந்து காய்கறி விற்கின்றனர்.

    கடந்த மாத நிலவரப்படி 14 ஆயிரத்து 566 பேர் தினமும் பயனடைந்து வந்துள்ளதாகவேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×