என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூரில் இன்று அதிகாலை பரபரப்பு - நடுரோட்டில் பழங்களை கொட்டி வியாபாரிகள் சாலைமறியல்
  X

  நடுரோட்டில் பழங்களை கொட்டி மறியலில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.

  திருப்பூரில் இன்று அதிகாலை பரபரப்பு - நடுரோட்டில் பழங்களை கொட்டி வியாபாரிகள் சாலைமறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.
  • பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர்சந்தையும் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை தென்னம்பாளையம் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.இந்தநிலையில் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே திருப்பூர் பல்லடம் சாலையில் பழ வியாபாரிகள் சிலர் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி வரை சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என தென்னம்பாளையம் மார்க்கெட் -உழவர்சந்தை வியாபாரிகள், விவசாயிகள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர பழக்கடைகளை அகற்றினர்.

  இந்தநிலையில் கடைகளை அகற்றியதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், தென்னம்பாளையம் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதிகாலை 4மணி முதல் காலை 8மணி மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென சாலையோர பழ வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

  மேலும் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் பழங்களை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு வியாபாரிகள் மறியலை கைவிட்டனர்.

  Next Story
  ×