search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதபூஜை"

    • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    வருகிற திங்கள்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும்.

    தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
    • ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆயுத பூஜையின் போது வீடுகள், பனியன் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கும், திருஷ்டி கழிப்பதற்கும் பூசணிக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதனால் திருப்பூருக்கு தற்போது பெருந்துறை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூசணிக்காய் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, பெருமாள் கோவில் வீதி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் இவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல் வெள்ளரி பழமும் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ வரத்து அதிகரிக்க ெதாடங்கியுள்ளது. இதில் செவ்வந்தி நாட்டு ரகம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு ரகம் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பிற பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஜாதிமல்லி ரூ.320, சம்பங்கி ரூ.120, பட்டுப்பூ ரூ.80, அரளி ரூ.220 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ள போதிலும் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை பெரிய அளவில் உயரவில்லை.

    • பொதுமக்கள் பொரி, பழங்கள், பூக்களை வாங்கி சென்றனர்
    • கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை:

    நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டா– டப்படுகிறது. இதனை–யொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவார்கள்.

    இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு தேவையான பொருட்களை கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர்.நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மக்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான எலுமிச்சம் பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைகுலை, தேங்காய் மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிேலாவில் வருமாறு:-

    மல்லிகைப்பூ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.360, அரளி ரூ.350, தாமரை பூ ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.350, செண்டுமல்லி ரூ.80, வாடாமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ.20க்கும், மாலை இலை 1 கட் ரூ.20க்கும் விற்பனையானது.

    சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.இதேபோன்று கோவையில் உள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
    • இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.

    திருப்பூர் :

    நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

    திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×