search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்"

    • வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
    • ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.

    மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.

    இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை நாமக்கல் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16-யை 15.12.2022-க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

    கடன் பெறாத விவசாயி கள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

    • கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.
    • ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிடெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகு படிக்காக மேட்டூர்அணை முன் கூட்டியே திறக்கப்பட்டது.

    இதனால்கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இலக்கை தாண்டி சாகுபடிநடந்து ள்ளது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தஞ்சை அருகே ராமநாதபுரம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பல பகுதிகளில் 5 வாரங்கள் கடந்த நாற்றுக்கள் செழுமை யாக வளர்ந்து நிற்கிறது.

    வளர்ந்துள்ள குறுவை பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயி சதீஷ் என்பவர் தனது சாகுபடி வயலில் ஆடுதுறை 36 வகை நெல்லை பயிரிட்டுள்ளார்.

    பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை மேற்கொள்ளும் இவர் ரசாயன உரத்திற்கு பதிலாக ரெட்டிப்பாளையத்தில் ஆட்டு கிடை போட்டுள்ள வர்களிடம் இருந்து ஆட்டுப்புழுக்கை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.

    இதற்காக பேய்வாரி தரைப்பாலத்தில் ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.

    இதுகுறித்து சதீஷ் கூறுகையில், பல ஆண்டு களாக இயற்கை வழி சாகுபடியை செய்து வருகிறேன்.

    ரசாயன உரங்கள் தெளிக்காமல் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்களிடம் மொத்தமாக ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    நாற்று நட்டதில் இருந்து இரண்டாவது முறையாக தற்போது இயற்கை உரம் தெளிக்கிறேன் என்றார். இவரை போல் ஏராளமான விவசாயிகளும் இயற்கை உரங்கள் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • தொடர்ந்து இடி- மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த மாதம் தொடக்கத்திலும் கனமழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இன்றி வெயில் அடித்தது. ஆனால் மீண்டும் நேற்று மழை பெய்தது. தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இரவு போல் காட்சியளித்தது.

    தொடர்ந்து இடி- மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பின்னர் மழை இன்றி காணப்பட்டாலும் தொடர்ந்து இடி- மின்னலுடன் குளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது.

    இந்த மழையால் தஞ்சை சாந்தபிள்ளைகேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக பூக்காரதெரு, விளார் சாலைக்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

    இதேப்போல் நாஞ்சிக்கோட்டை, கொல்லாங்கரை, வேங்கைராயன்குடிகாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

    ஆலங்குடி பறவழிச்சாலை பாலம் அருகே மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தது.

    மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால்அறுவ டைக்கு தயாரான குறுவை பயிர்கள் பாதிக்கப்ப ட்டிருந்தன.

    2 நாட்களாக மழை இன்றி வெயில் அடித்ததால் அறுவடை பணியை தொடங்கலாம் என விவசாயிகள் நினைத்திருந்தனர்.

    ஆனால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு குறுவை முன் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர் மழையால் பாதிக்கப்ப ட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    திருச்சி :

    தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தா.பேட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியின் உளுந்து, நிலக்கடலை, சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சிறு தானியங்கள் தொகுப்பில் விதைகள், உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    பயறு தொகுப்பில் ரூ1,250, ரூ1,570-ம், எண்ணெய் வித்து தொகுப்பில் ரூ 4,002, ரூ5,600-ம் மானியமும் இடுபொருள்களுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.
    • கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

    திருப்பூர் :

    சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலூர் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.தற்போது அவை பல்கி பெருகி பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளன.

    அவை விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு இதனால் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல மடங்கு பெருகிவிடும். மான்கள் கூட்டம் பெருகினால் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

    அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7ஆயிரத்து500 வரையும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும், இந்த திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூலை 2-ம் வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.

    இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி மற்றும் நீண்ட கால பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
    • குருத்து சேதமடைந்துள்ளதால், தென்னங்கன்றுகள் வளராது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியம்அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி, புதூர், பழையூர், அடிவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது.கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி மற்றும் நீண்ட கால பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். மேலும் தற்போதைய சீசனில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் புதிதாக தென்னங்கன்று நடவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றிகள் கூட்டம், விளைநிலங்களில் ஏற்படுத்தும் சேதம் காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து, தென்னங்கன்றுகளின் குருத்தை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.அனிக்கடவு கிராமத்தைச்சேர்ந்த, சக்திவேல், சதாசிவம் உள்ளிட்ட விவசாயிகளின் விளைநிலங்களில், புகுந்த காட்டுப்பன்றிகள்,நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளின், குருத்தை சேதப்படுத்தி சென்றுள்ளன.குருத்து சேதமடைந்துள்ளதால், தென்னங்கன்றுகள் வளராது.அவற்றை அகற்றி விட்டு, மீண்டும் புதிதாக கன்று நடவு செய்ய வேண்டும். இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: -வனப்பகுதியில் இருந்து தொலைதூரத்தில், அமைந்துள்ள கிராமங்களிலும், காட்டுப்பன்றிகளால்கடுமையான சேதம் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக காய்கறி மற்றும் தென்னை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.வரப்புகளில் வண்ண சேலைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டும் பலனில்லை. மனிதர்களையும் காட்டுப்பன்றிகள் தாக்குவதால் இரவு நேரங்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னையால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயமே கேள்விக்குறியாகியுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிப்பை தவிர்க்க முடியாது.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஒரு காலத்தில் வனத்தில் மட்டுமே மான்கள் வாழ்ந்தது. வனத்தை சிறிது சிறிதாக மனிதர்கள் ஆக்கிரமிக்க துவங்கிய பின்விலங்குகளின் வாழ்விடம் பறிபோனது. இதனால் மான், யானை, கரடி உட்பட பல விலங்குகள் கூட்டம் உணவு தேடி சமவெளிப் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான்கள் உணவு தேட வந்த இடத்தையே தங்கள் வாழ்விடமாக மாற்றி விடுகின்றன.

    அவிநாசி அருகே புதுப்பாளையம் குளத்தில் மான்கள் பெருகியதால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியை சுற்றியுள்ள சின்னாரியபட்டி, தங்காய்புதுார், பெரியாரியபட்டி போன்ற பகுதிகளில் மான்கள் கூட்டம் பெருகி வருகிறது. இவை பயிர்களை தின்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மான்கள் பெருகி வருவதால் மாட்டுத்தீவனம் பயிர்கள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை சாப்பிட்டு விடுகின்றன.இரவு நேரத்தில் அவை மேய்ச்சலுக்கு வருவதால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பெரிய அளவில் பாதிப்பில்லை.வறட்சி காலங்களில் கால் ஏக்கர், அரை ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கிறோம். அவற்றையும் மான்கள் முடித்து விடுகின்றன. மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாது.பெருகிவரும் மான் கூட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×