என் மலர்

  நீங்கள் தேடியது "damge"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி மற்றும் நீண்ட கால பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
  • குருத்து சேதமடைந்துள்ளதால், தென்னங்கன்றுகள் வளராது.

  குடிமங்கலம் :

  குடிமங்கலம் ஒன்றியம்அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி, புதூர், பழையூர், அடிவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது.கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி மற்றும் நீண்ட கால பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். மேலும் தற்போதைய சீசனில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் புதிதாக தென்னங்கன்று நடவு செய்துள்ளனர்.

  இந்நிலையில், அப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றிகள் கூட்டம், விளைநிலங்களில் ஏற்படுத்தும் சேதம் காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து, தென்னங்கன்றுகளின் குருத்தை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.அனிக்கடவு கிராமத்தைச்சேர்ந்த, சக்திவேல், சதாசிவம் உள்ளிட்ட விவசாயிகளின் விளைநிலங்களில், புகுந்த காட்டுப்பன்றிகள்,நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளின், குருத்தை சேதப்படுத்தி சென்றுள்ளன.குருத்து சேதமடைந்துள்ளதால், தென்னங்கன்றுகள் வளராது.அவற்றை அகற்றி விட்டு, மீண்டும் புதிதாக கன்று நடவு செய்ய வேண்டும். இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: -வனப்பகுதியில் இருந்து தொலைதூரத்தில், அமைந்துள்ள கிராமங்களிலும், காட்டுப்பன்றிகளால்கடுமையான சேதம் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக காய்கறி மற்றும் தென்னை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.வரப்புகளில் வண்ண சேலைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டும் பலனில்லை. மனிதர்களையும் காட்டுப்பன்றிகள் தாக்குவதால் இரவு நேரங்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னையால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயமே கேள்விக்குறியாகியுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிப்பை தவிர்க்க முடியாது.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

  ×