search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subsidized"

    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் முழு மானியத்தில் குழித்தட்டு மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
    • இணையதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.

    இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற இைணயதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
    • கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தாராபுரம், திருப்பூர், உடுமலை உபகோட்ட வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆதார்கார்டு, வங்கிகணக்கு எண், போட்டோ ஆகியவற்றினை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய இயலாத விவசாயிகள்அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் உதவியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    மானியத்தொகை போக மீதம் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை அல்லது மின்னணு பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம். சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பவர்டிரில்லர் பெறப்பட்ட பின்னர் துறை அலுவலர்களால் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மானியத் தொகை, உரிய நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவிசெயற்பொறியாளர் தி.சந்திரன்- 9442529340, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ். சுந்தரராஜன்- 9865028152 ,உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் 9003930773 ஆகியோரின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டா ரத்தில் மேலவளவு மற்றும் கேசம்பட்டி, கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் வழங்கினார்.

    வேளாண்மை துறை சார்பாக 50 சதவீதம் மானியத்தில் தார்பாலின், பண்ணை கருவிகள், நேரடி நெல் விதைக்கும் கருவி மற்றும் தென்னை நடவு, மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.

    பின்னர் தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் ராணி, வேளாண்மை உதவி இயக்குநர் சுபாசாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், துணை வேளாண்மை அலுவலர் தனசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி தோட்டக்கலை அலுவலர் அப்துல் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொகையை வழங்க வேண்டும்.
    • அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் அழைப்பை ஏற்றுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முடிவின்படி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி, ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டக்கி ளைகள் இணைந்து கோட்ட அளவில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி துவக்கி வைத்து பேசினார்.

    வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் எச். உமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சொ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், கும்பகோணம் நகர செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள் உதயகு மார், பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் நிறைவுரை உரையாற்றினார்.

    நிறைவாக திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் நன்றி தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.

    எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொ கையை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும்.

    70 வயது முதிர்வடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000/- ஆக வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

    • மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
    • மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்க மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • மின்வாரிய ஓய்வூதியர் சங்க 26ம் ஆண்டு விழா

    கரூர்:

    கரூர் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க 26ம் ஆண்டு விழா கரூர் நாரத கான சபாவில் நடந்தது. சங்க தலைவர் ஜவஹர் தலைமை வகித்து பேசினார். கௌரவ தலைவர் சிவராமன், துணைத்தலைவர் ரத்தினா சலம், பெரியண்ணன், அமைப்பு செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் கோபாலன் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை செயலாளர் ராஜ கோபாலும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சின்னசாமி வாசித்தனர்.

    மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படியை ஜூலை 1ம் தேதி முதல் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் அகவிலைப்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். அகில இந்திய அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாநில சங்க நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த தொகுப்பில் 1 கடப்பாரை, 1 இரும்பு சட்டி ,1 களைக்கொத்து,1 மண்வெட்டி,2 கதிர் அருவாள் என மொத்தம் 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சின்ன குமாரபாளையம்,குருவப்ப நாயக்கனூர்,மொடக்குப்பட்டி,தீபாலப்பட்டி,கணக்கம்பாளையம்,கண்ணமநாயக்கனூர்,சின்னவீரன்பட்டி,ஆலாம்பாளையம்,ஜிலோபநாயக்கன்பாளையம்,தின்னப்பட்டி,குறுஞ்சேரி,வடபூதனம் ஆகிய 12 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு 300 தொகுப்புகளும்,மற்ற ஊராட்சிகளுக்கு 30 தொகுப்புகளும் ஆக மொத்தம் 330 தொகுப்புகள் 4.95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

    • திருப்பத்தூரில் அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வட்டார வள கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அழகுமணி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் முத்துமாரியம்மன், 30 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பழைய ஓய்வுதத் திட்டம், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கும் திட்டம், தேசிய வழி கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7ஆயிரத்து500 வரையும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும், இந்த திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூலை 2-ம் வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.

    இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபிலர்மலை வட்டாரத்தில் 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும்.

    பரமத்திவேலூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் கபிலர்மலை வட்டாரம் பிலிக்கல்பாளையம், இருக்கூர், அ.குன்னத்தூர் ஆகிய 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும். தென்னங் கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்யுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை நலத்துறை இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2018-19-ல் இந்த திட்டம் ரூ.19.74 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும்.

    தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழப்பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பு பயிர், பலஅடுக்கு பயிர் வழங்கப்படும். மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரவல்ல பசுமைக் குடில்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

    விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.

    இதனை பற்றிய தகவல் அறிந்து பயன்பெற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும், 04567-230832, 230328 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ×