என் மலர்

  நீங்கள் தேடியது "collector natarajan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் நடராஜன், அங்கன்வாடி மையம், கண்மாய், சத்துணவு கூடங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சி குப்பை கிடங்கு திடக்கழிவு மேலாண்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் நடராஜன், அங்கன்வாடி மையம், கண்மாய், சத்துணவு கூடங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சி குப்பை கிடங்கு திடக்கழிவு மேலாண்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டில் கலெக்டர் நடராஜன் ஆய்வு பணி மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மருத்துவமனை இணை இயக்குநர் பூமிநாதன், மருத்துவர்கள் ராதாமணி, யோகவதி, பாரதி நிலையமருத்துவர் ரமாஸ்ரீ, உசிலம்பட்டி வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பரமசிவம், இளங்கோவன், பொறியாளர் கண்ணன், நகராட்சி பொறியாளர் அழகேஸ்வரி, சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  மேலும் உசிலம்பட்டி கண்மாய், செட்டியபட்டி அங்கன்வாடிமையம், பள்ளிக்கூடம், சத்துணவு மையங்கள், உசிலம்பட்டி நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை பார்வை யிட்டு உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜரானார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
  புதுடெல்லி:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் பிரசித்திபெற்ற ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஒரு பிரிவினரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

  இதன் காரணமாக இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. சுவரை அகற்ற வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

  ஒரு பிரிவினர் மலையில் குடியேறினர். மாநிலம் முழுவதும் எதிரொலித்த இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இரு சமூகத்தினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது.

  இந்த நிலையில் பிரச்சனைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சுவரை தீண்டாமை சுவர் என அறிவித்த மாவட்ட நிர்வாகம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தது. தீண்டாமை சுவர் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கருப்பையா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகஸ்டு 28-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


  அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரிடம் சுவர் எழுப்பப்பட்டது எப்படி என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அனைத்து தரப்பினரும் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுக்கப்படவில்லை என்றால் சுவரை இடிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

  கலெக்டர் தரப்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் தீண்டாமை சுவர் இல்லை. யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு செல்லலாம். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய பிறகு தற்போது அமைதி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உரம் இருப்பு, விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

  ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் முழுவதுமாக வடகிழக்கு பருவ மழையை நம்பியே நடைபெறுகிறது. நடப்பு ஆண்டில் 1,25,000 ஹெக்டர் நெல், 7,400 ஹெக்டர் சிறுதானியங்கள், 3,800 ஹெக்டர் பயறு வகைகள் மற்றும் 6540 ஹெக்டர் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு ராபி பருவத்திற்கு தேவையான ரசாயன உரம் 40,440 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களிலும் தேவை யான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

  இவற்றில் யூரியா 1945 மெ.டன், டி.ஏ.பி 688 மெ.டன், பொட்டாஷ் 140 மெ.டன், கலப்பு உரங்கள் 947 மெ.டன் ஆக மொத்தம் 3720 மெ.டன் என உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  ஆகஸ்ட் 2018 மாதத்திற்கு தேவையான உர விநியோக திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட உர உற்பத்தி நிறுவனங்களான இப்கோ கூட்டுறவு நிறுவனம்,, ஸ்பிக் நிறுவனம், மதராஸ் உர நிறுவனம், பாக்ட் நிறுவனம், இந்தியன் பொட்டாஷ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக தனியார் மற்றம் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  உர விற்பனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை முனைப்பு எந்திரம் மூலமாக மட் டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. யூரியா தவிர பொட்டாஷ், பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்கள் அந்தந்த உர உற்பத்தி நிறுவனங்களினால் உர மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

  வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா தற்போது 45 கிலோ மூடைகளில் கிடைக்கிறது. ஒரு மூடையின் அதிக பட்ச விற்பனை விலை ரூ.266.50 ஆகும்.

  உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியியல் விபரத்தினை பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்றாலோ அல்லது தரமற்ற உரங்களை விற்றாலோ விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுபாடு சட்டம் 1985ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலெக்டர் நடராஜன் நேரடியாக சென்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

  ராமநாதபுரம்:

  பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலெக்டர் நடராஜன் நேரடியாக சென்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

  முதலாவதாக கலெக்டர் நடராஜன் கமுதக்குடி கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து வெங்காளூர் ஊராட்சிக்கு நேரில் சென்று வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அதில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி மற்றும் சரியான எடை உள்ளனவா என்பது குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார்.

  மேலும் சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும் பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்திடுமாறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

  மேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறும், அங்கன்வாடி கட்டிடத்திற்கு உடனடியாக மின்வசதி சரிசெய்து கொடுக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  அதனைத் தொடர்ந்து அவர் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
  ராமநாதபுரம்:

  நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  2018-19-ல் இந்த திட்டம் ரூ.19.74 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும்.

  தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழப்பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பு பயிர், பலஅடுக்கு பயிர் வழங்கப்படும். மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரவல்ல பசுமைக் குடில்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

  விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.

  இதனை பற்றிய தகவல் அறிந்து பயன்பெற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும், 04567-230832, 230328 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

  மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுற்றுப்புற தூய்மையை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டை கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை ஆகியவை தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசிய தாவது:-

  கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்கான நடவடிக் கைகள், படித்த வேலை வாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி மற்றும் ஆர்வத்திற்கேற்ப பயிற்சி வழங்கி சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2019-ம்ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

  இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலுசேர்த்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.7.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

  எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைவரும் சுற்றுப்புறத்தூய்மைக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசி னார்.

  இதை தொடர்ந்து, சித்தார் கோட்டை கிராமத்தில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்கான கட்டுமானப் பணிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சுற்றுப்புறத்தினை பாதுகாத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் மரக்கன்றுகள் நடவு திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

  அதைத்தொடர்ந்து முடிவீரன்பட்டினம் கிராமத்தில் பொதுமக்கள் உபயோகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பயன்பாடுகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமர் ஜாமியா, சேவுகபெருமாள், ராமநாதபுரம் வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  ×